இந்தியா - ஆஸ்திரேலியா : இன்று முதல் ஒருநாள் போட்டி! ரன் மழை பொழிய வாய்ப்புள்ளதா?

இந்தியா - ஆஸ்திரேலியா : இன்று முதல் ஒருநாள் போட்டி! ரன் மழை பொழிய வாய்ப்புள்ளதா?

ஆஸ்திரேலிய அணி இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டு சமீபத்தில் பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடி முடித்துள்ளது. அதைத்தொடரந்து 3 ஒரு நாள் போட்டி கொண்ட தொடரின் முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெற இருக்கிறது.

கிரிக்கெட்டைப் பொறுத்தவரை டெஸ்ட் மேட்ச் என்பது 5 நாட்கள் தொடர்ந்து நடைபெறக்கூடிய போட்டி என்பதால், அதைவிட ஒரு நாள் போட்டிகள் ரசிகர்களை வெகுவாகவே கவரக்கூடிய போட்டியாக அமையும். மைதானத்தில் ரசிகர்களின் கூட்டம், அவர்களின் ஆர்ப்பரிப்பு, பேட்டிங்கின் போது பவுண்டரிகள், சிக்ஸர்கள் என பேட்ஸ்மேன்களின் அதிரடி ஆட்டம் என மைதானமே அதிரும்.

அதிலும் இந்தியா ஆஸ்திரேலிய அணிகள் ஒரு நாள் போட்டியில் மோதும்போது அது ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்.

அந்தவகையில் இன்று மதியம் இந்திய நேரப்படி 2 மணிக்கு, இந்தியா ஆஸ்திரேலிய அணி பங்குபெறும் முதல் ஒருநாள் போட்டி, மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்த போட்டி நடைபெறும் மைதானமானது பெரும்பாலும் பேட்டிங்கிற்கு சாதகமானதாகவே பார்க்கப்படுகிறது. சுழற்பந்து, வேகப்பந்து என அனைவரும் விக்கெட் எடுப்பதற்கு சிரமப்படும் சூழ்நிலையும் உருவாகலாம். ஆட்டத்தின் தொடக்கத்தில் ஸ்விங் இருந்தாலும், போகப்போக மைதானத்தின் தன்மை பேட்டிங்கிற்கு சாதகமாக மாறிவிடும். அதனால் முதலில் சற்று நிதானமாக நின்று ஆடினால் பின்னர் பெரிய ஸ்கோரை அடிக்க வாய்ப்பு ஏற்படும்.

இன்றைய போட்டியைப் பொறுத்தவரை ரோஹித் சர்மா தனிப்பட்ட காரணத்தால் இன்று விளையாடாத நிலையில், அவருக்குப் பதிலாக ஹார்திக் பாண்டியா கேப்டன் பொறுப்பில் இருந்து அணியை வழிநடத்துவார்.

சர்வதேசப் போட்டிகளைப் பொறுத்தவரை, இந்த மைதானத்தில் இதுவரை, 13 முறை முதலில் பேட்டிங் செய்த அணியும், 14 முறை 2வது பேட்டிங் செய்த அணியும் வெற்றியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com