சர்வதேச மகளிர் ஓபன் டென்னிஸ்; அலிசன் அதிர்ச்சி தோல்வி!

சர்வதேச மகளிர் ஓபன் டென்னிஸ்; அலிசன் அதிர்ச்சி தோல்வி!

சென்னையில் நடந்து வரும் சர்வதேச மகளிர் ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரில், அமெரிக்க முன்னணி வீராங்கனை அலிசன் ரிஸ்க் அமிர்தராஜ் முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்று வரும் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டித் தொடர் போட்டியின் முதல் சுற்றுப் போட்டி நேற்று மாலை நடந்தது. இதில் அமெரிக்க வீராங்கனை அலிசன் ரிஸ்க் அமிர்தராஜ் தோல்வியடைந்தது டென்னிஸ் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி தரவரிசையில் 29-வது இடத்தில் உள்ள அலிசன், நேற்று நடந்த முதல் சுற்றுப் போட்டியில் தரவரிசையில் 147-வது இடத்தில் உள்ள ரஷ்ய வீராங்கனை கஷாநோவாவை எதிர்கொண்டார்.

தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய கஷாநோவா 6-க்கு 2, மற்றும் 6-க்கு 3 என்ற நேர் செட் கணக்கில் அலிசன் ரிஸ்கை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். இதையடுத்து அலிசன் அதிர்ச்சி தோல்வியடைந்து முதல் சுற்றிலேயே வெளியேறினார்.

உக்ரைன் போரால் ரஷ்ய விளையாட்டு வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கஷாநோவா ரஷ்ய கொடி இல்லாமல் விளையாடினார் என்பது குறிப்பிடத் தக்கது. அதேபோல், இந்தியாவின் பிரபல டென்னிச் வீரரான அமிர்தராஜ் குடும்பத்து மருமகள் அலிசன் ரிஸ்க் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com