IPL 2023: முதல்முறையாக ஐபிஎல்-லில் களமிறங்கிய அர்ஜூன் டெண்டுல்கர்! ஆட்டம் எப்படி?

IPL 2023: முதல்முறையாக ஐபிஎல்-லில் களமிறங்கிய அர்ஜூன் டெண்டுல்கர்! ஆட்டம் எப்படி?

நேற்றைய ஐபிஎல்-லின் 2வது போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதிய நிலையில், டெண்டுல்கரின் மகன், வேகப்பந்து வீச்சாளரான அர்ஜூன் டெண்டுல்கர் ஐபிஎல் முதல் போட்டியில் அறிமுகமாகியுள்ளார்.

ஐபிஎல் 16வது சீசனின் 22வது போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. இதில் கொல்கத்தா அணியும், மும்பை அணியும் மோதின. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பவுலிங்கை தேர்வு விளையாடிய நிலையில், இப்போட்டியில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் அறிமுக வீரராக விளையாடியுள்ளார்.

சச்சின் டெண்டுல்கர் ஐபிஎல் போட்டியைப் பொறுத்தவரை, மும்பை அணிக்காக 2008-2013ம் ஆண்டு வரை விளையாடி மொத்தம் 78 போட்டிகள் விளையாடியுள்ளார்.

சச்சின் 2008ல் ஐபிஎல்-லில் விளையாடும்போது, அவரது மகன் அர்ஜூன் டெண்டுல்கருக்கு 8 வயது. அப்போதே அவர் மைதானத்திற்கு வந்து விளையாட்டை ரசித்தவண்ணம், போட்டிகளை ரசித்து, கைதட்டி அனைவரையும் உற்சாகப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், தற்போது 23 வயதான அர்ஜூன் டெண்டுல்கரும் மும்பை அணிக்காக தனது முதல் ஐபிஎல் போட்டியில் நேற்று விளையாடி உள்ளார்.

இதுவரையில் 7 ஃபர்ஸ்ட் கிளாஸ் போட்டிகளில் விளையாடிய அர்ஜூன் 223 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 120 ரன்களும் எடுத்துள்ளார்.

இடது கை பந்துவீச்சாளரான அர்ஜூன் டெண்டுல்கர், ஃபர்ஸ்ட் கிளாஸ் போட்டிகளில் 12 விக்கெட்டும், டி20 போட்டிகளில் 12 விக்கெட்டும், லிஸ்ட் ஏ போட்டியில் 8 விக்கெட்டும் கைப்பற்றியுள்ளார். அதோடு சென்ற வருடம் கோவா அணியில் இடம்பெற்று ரஞ்சி டிராபி போட்டியில் விளையாடிய அர்ஜூன் 7 போட்டிகளில் 223 ரன்கள் எடுத்ததோடு, 12 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.

இதையடுத்து, நேற்று மும்பை வான்கடே மைதானத்தில், கொல்கத்தா அணிக்கெதிராக முதல் டி20 போட்டியில் பந்து வீசிய அர்ஜூன் டெண்டுல்கர், 2 ஓவர்களை வீசிய நிலையில், முதல் ஓவரில் 5 ரன்களும், 2வது ஓவரில் வைடு உள்பட 13 ரன்கள் விட்டுக் கொடுத்தார். இந்த 2 ஓவரில் அவர் விக்கெட் எதுவும் எடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அறிமுக வீரராக களமிறங்கிய அர்ஜூன் டெண்டுல்கருக்கு ரோகித் சர்மா, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்பை அணிவித்து வரவேற்றதும் குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com