ஐபிஎல் கிரிக்கெட் போட்டி டைட்டில் ஸ்பான்சர்ஷிப்: டாடா நிறுவனம் கைப்பற்றியது!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி டைட்டில் ஸ்பான்சர்ஷிப்: டாடா நிறுவனம் கைப்பற்றியது!

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் டைட்டில் ஸ்பான்சர்ஷிப் டாடா நிறுவனத்துக்கு கிடைக்கப் பெற்றதாக ஐபிஎல் கிரிக்கெட் வாரியத் தலைவர் பிரிஜேஷ்படேல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது:

ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான டைட்டில் ஸ்பான்சர்ஷிப் இதுவரை சீனாவின் விவோ நிறுவனத்துக்கு சொந்தமாக இருந்தது. இந்நிலையில் இந்த ஸ்பான்சர்ஷிப்இப்போது இந்தியாவின் டாடா குழுமத்திற்கு கைமாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து ஐபிஎல் நிர்வாகக் குழுகூட்டத்தில் முடிவெடுக்கப் பட்டது. சுமார் 440 கோடி ரூபாய்க்கு விவோ நிறுவனம் டைட்டில்ஸ்பான்சராக ஐந்து ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. அந்த வகையில் இன்னும் 2 ஆண்டு கள்விவோ ஸ்பான்சர்ஷிப் எஞ்சியுள்ள நிலையில் டாடா குழுமத்திடம் தற்போது அதுமாற்றப் பட்டுள்ளது. அடுத்து நடைபெறவுள்ள இரண்டு சீசன்களிலும் டாடா டைட்டில்ஸ்பான்சராக இருக்கும். அந்தவகையில் இனி 'டாடாஐபிஎல்' எனஅறிவிக்கப் படும்.

-இவ்வாறு ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ்படேல் தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com