சதமடித்து வரலாறு படைத்தார் மெஸ்ஸி!

சதமடித்து வரலாறு படைத்தார் மெஸ்ஸி!

குராக்கோவுக்கு எதிராக லியோனல் மெஸ்ஸியின் உன்னத ஹாட்ரிக், அர்ஜென்டினாவுக்காக 100 கோல்களை கடந்தது.

இந்த உலகக் கோப்பை வெற்றியாளர்கள் டிசம்பரில் கோப்பையைக் கைப்பற்றியதில் இருந்து தாங்கள் பங்கேற்கும் இரண்டாவது போட்டியில் கரீபியன் அணியை 7-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தனர்.

அர்ஜென்டினாவின் சூப்பர் ஸ்டார் லியோனல் மெஸ்ஸி, குராக்கோவுக்கு எதிராக முதல் பாதியில் ஹாட்ரிக் அடித்த பிறகு அர்ஜென்டினாவுக்காக 100 கோல்களை கடந்தார்.

மெஸ்ஸியின் மூன்று கோல்களுமே ஒரு மெஜீசியனின் புத்திசாலித்தனமான தருணத்தையும், சரியான நேரத்தில் சரியான இடத்தில் இருப்பதற்கான மனதையும் வெளிப்படுத்தியது. அந்த தெய்வீக தருணத்தில் அவரது கம்பீரமான முடிவு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

ஃபிபா உலகக் கோப்பை வெற்றியாளர்கள் டிசம்பரில் கோப்பையைக் கைப்பற்றியதில் இருந்து அடுத்ததாக அவர்களுக்குக் கிடைத்தை மிகப்பெரிய வரலாற்றுச் சிறப்புடைய வெற்றி இது.

35 வயதான மெஸ்ஸி, குராக்கோவுக்கு எதிராக 20வது நிமிடத்தில் பாக்ஸின் விளிம்பில் இருந்து வலது கால் ஷாட் மூலம் 100 கோல் மைல்கல்லை எட்டினார். நிக்கோ கோன்சலேஸ் மூன்று நிமிடங்களுக்குப் பிறகு, அருகில் இருந்து ஹெட்டர் மூலம் மேலும் வலு சேர்த்தார்.

பின்னர் 33வது நிமிடத்தில் அர்ஜென்டினாவுக்காக மெஸ்ஸி தனது 101வது ஷாட்டை கோல்கீப்பரின் வலதுபுறமாக கிராஸ் செய்து ஷாட் அடித்தார். இரண்டு நிமிடங்களுக்கு முன்பு அவர் பாக்ஸின் விளிம்பிலிருந்து என்ஸோ பெர்னாண்டஸின் உற்சாக எழுச்சிக்கு உதவினார்.

அஃபீசியல் போட்டிகளில் தேசிய அணிகளுக்காக அதிக கோல்கள் அடித்த பட்டியலில் இரண்டே இரண்டு வீரர்களை மட்டுமே மெஸ்ஸி இன்னும் பின் தள்ள வேண்டியிருக்கிறது. மெஸ்ஸியின் முன்னோடிகளாக போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ 122 ரன்களுடனும், ஈரானின் அலி டேய் 109 ரன்களுடனும் உள்ளனர் முன்னிலையில் உள்ளனர்.

மெஸ்ஸி இந்த ஆட்டங்களில் வெகு கூர்மையாக இருந்தார். அணித்தலைவராக அர்ஜெண்டினா அணி வீரர்களுடனான அவரது அருமையான கெமிஸ்ட்ரியை நீங்கள் நிச்சயம் கவனிக்காமல் இருந்திருக்க முடியாது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com