விராட் கோலியின் இந்த சாதனையால் சமன் செய்யப்பட்ட சச்சினின் சாதனை! இதுகுறித்து ஓப்பனாக பேசிய சச்சின்!

விராட் கோலியின் இந்த சாதனையால் சமன் செய்யப்பட்ட சச்சினின் சாதனை! இதுகுறித்து ஓப்பனாக பேசிய சச்சின்!

இலங்கையுடனான நேற்றைய போட்டியில் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இந்நிலையில், நேற்றைய போட்டியில் விராட் கோலி சதம் அடித்ததன் மூலம் சாதனை படைத்துளளார்.

நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி துவக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. சுப்மன் கில், ரோகித் சர்மா, விராட் கோலி என எல்லாரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணி இமாலய ஸ்கோரை எட்ட உதவினர். அதிலும் விராட் கோலி பொறுமையாகவும், திறமையாகவும் விளையாடி 87 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் உட்பட 113 ரன்கள் எடுத்தார்.

இவரது இந்த சதத்தின் மூலம் இலங்கைக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிக சதங்கள் அடித்தவராக சச்சின் (8 சதங்கள்) இருந்துவந்த நிலையில், நேற்றைய சதத்தின் மூலம் கோலி 9 சதங்கள் அடித்து அவரை முந்தியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல், இந்திய மண்ணில் அதிக சதங்கள் அடித்தவர் பட்டியலில் இதுவரை சச்சின் 20 சதங்கள் எடுத்து முன்னுக்கு இருந்த நிலையில், தற்போது கோலியும் 20 சதங்கள் எடுத்த நிலையில் அதை சமன் செய்துள்ளார்.

போதாக்குறைக்கு, சச்சினின் மகத்தான சாதனையாக பார்க்கப்படும் சர்வதேச ஒருநாள் போட்டியில் 49 சதங்களை அடித்து எட்டா இடத்தில் இருந்துவரும் சாதனையை விராட் கோலி எட்டுவதற்கு இன்னும் 5 சதங்கள்தான் தேவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், விராட்கோலியின் இந்த அதிரடி விளையாட்டுக்குப் பின்னர், சச்சின் தெண்டுல்கர் தனது ட்விட்டர் பதிவில், உங்களிடம் இதுபோன்ற சிறப்பான ஆட்டம் எப்போதும் தொடர வேண்டும். இந்தியாவின் பெயரை மேலும் உச்சத்திற்கு கொண்டு செல்லுங்கள். டாப் ஆர்டர் பேட்டிங் சிறப்பாக உள்ளது. என்று சச்சின் கூறியுள்ளார். சச்சினின் இந்த பாராட்டு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com