ஸ்டோய்னிஸின் கன்னத்தில் முத்தமிட்ட சக வீரர்! காதலர் தின வைரல் புகைப்படம்!
காதலர் தின வாழ்த்துடன், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான மார்கஸ் ஸ்டோய்னிஸின் கன்னத்தில் சக வீரர் முத்தத்தைக் கொடுக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பிப்ரவரி 14ம் தேதியான இன்று உலகம் முழுவதும் காதலர் தினம் வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. காதலன் காதலி என்று மட்டுமில்லாமல், அன்பின் வெளிப்பாடாய் ஒவ்வொருவரும் தங்கள் அன்பை பெருமிதத்துடன் காதலாக அழகாக வெளிப்படுத்துவதோடு, அதில் ஒரு சிலர் வைரலாகவும் மாறிவிடுகிறார்கள்.
அந்த வகையில், இன்று ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ் 2022-23 இல் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடிய சக வீரர்களான ஆடம் ஜாம்பா மற்றும் மார்கஸ் ஸ்டோய்னிஸ் இருவரின் புகைப்படம்தான் ஹாட் லிஸ்ட்டில் வைரலாகி வருகிறது.
அதவாது, KFC Big Bash League-ன் ட்விட்டர் பக்கத்தில் இன்று பகிரப்பட்டுள்ள புகைப்படத்தில், காதலர் தின வாழ்த்தை தெரிவிக்கும் விதமாக, "காதலர் தின வாழ்த்துகள்" என்று ஈமோஜியுடன் தலைப்பிட்டு, ஆடம் ஜாம்பா, மார்கஸ் ஸ்டோய்னிஸின் கன்னத்தில் அழுத்தமான முத்தத்தைத் பகிரும்படியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த புகைப்படம்தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. ஆடம் ஜாம்பா மற்றும் மார்கஸ் ஸ்டோய்னிஸ் இருவருமே பிக் பாஷ் 2022-23 இல் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.