மலேசிய நீச்சல் போட்டியில் 5 தங்கம் வென்று அசத்திய பிரபல நடிகரின் மகன்!

மலேசிய நீச்சல் போட்டியில் 5 தங்கம் வென்று அசத்திய பிரபல நடிகரின் மகன்!

மலேசிய நீச்சல் போட்டியில் 5 தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார் நடிகர் மாதவன் மகன் வேதாந்த். பாலிவுட் மற்றும் கோலிவுட் நடிகர் மாதவனின் மகன், வேதாந்த் மாதவன் 2023 மலேசிய ஓபனில் ஒன்று, இரண்டு அல்லது மூன்று அல்ல, ஐந்து தங்கப் பதக்கங்களை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

இது குறித்து நடிகர் மாதவன் தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியான சேதியினை பகிர்ந்து உள்ளார். தனது சாம்பியன் மகனின் அழகான புகைப்படங்களுடன், "2023 இந்த வார இறுதியில் கோலாலம்பூரில் நடைபெற்ற மலேசிய போட்டியில் கடவுளின் கிருபையுடனும், உங்கள் எல்லா நல்வாழ்த்துக்களுடனும், வேதாந்த் இந்தியாவுக்காக 5 தங்கங்களை (50 மீ, 100 மீ, 200 மீ, 400 மீ மற்றும் 1500 மீ) பிரிவு சாம்பியன்ஷிப்பில் பெறுகிறார். . மகிழ்ச்சி மற்றும் மிகவும் நன்றி என தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் மாதவன் தனது மகனுக்கு விளையாட்டுத் துறை மீது ஆர்வம் உள்ளதால் அதற்காக தொடர்ந்து அவருக்கு ஊக்கமளித்து வந்தார். மாதவனின் மகன் வேதாந்த் சிறுவயது முதல் நீச்சல் விளையாட்டில் அதிக ஈடுபாட்டுடன் பயிற்சி பெற்றுவருகிறார். 17 வயதான அவர் தற்போது இந்தியாவின் சார்பில் சர்வதேச அளவிலான நீச்சல் விளையாட்டு போட்டியில் பங்கேற்று வருகிறார்.

கடந்த பிப்ரவரி மாதம் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டியில் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான வீரர்கள் பங்கேற்றனர். மாதவன் மகன் வேதாந்த் மகாராஷ்டிரா அணிக்காக நீச்சல் போட்டியில் பங்கெடுத்து 5 தங்கம், 2 வெள்ளிப் பதக்கங்களை வென்றிருந்தார்.

இந்த நிலையில் கோலாலம்பூரில் நடைபெற்ற மலேசிய நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் வேதாந்த் இந்தியாவிற்காக 5 தங்கங்களை (50, 100, 200, 400 & 1500 மீ) பெற்றுள்ளார் என நடிகர் மாதவன் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த பதிவுக்கு இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் உட்பட திரைப் பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com