ரசிகரின் செயலால் மனமுடைந்த விராட் கோலி! கடுப்பான அனுஷ்கா ஷர்மா!

ரசிகரின் செயலால் மனமுடைந்த விராட் கோலி! கடுப்பான அனுஷ்கா ஷர்மா!

உலக கிரிக்கெட் வீரர்கள் தர வரிசையில் முன்னணி வீரராக வலம் வருபவர் விராட் கோலி. அவருக்கான ரசிகர் பட்டாளத்துக்கு அளவே இல்லை. அதேபோல் ரசிகர்களை நன்கு மதிக்கத் தெரிந்தவரும்கூட.

இந்நிலையில், தனது ரசிகர்களை கடுமையாக விமர்சித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது ஆஸ்திரேலியாவில் டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா விளையாடி வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் ஹோட்டல் அறையில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வைரலானதைத் தொடர்ந்து, இது விராட் கோலியின் பார்வைக்கும் சென்றது.

அந்த வீடியோவைக் கண்டு அதிர்ச்சியுற்ற விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ரசிகர்களுக்கு அவர்களது ஃபேவரைட் வீரர்களைப் சந்திப்பது என்றால் மிகவும் பிரமிப்படைவார்கள் என்பதை நான் அறிவேன். அதை எப்போதும் நான் மதிக்கிறேன். அதேசமயம் எனது அறையில் எடுக்கப்பட்டுள்ள இந்த வீடியோ தற்போது என்னை மிகவும் அதிர்ச்சியடைய வைத்ததாகவும், எனது தனிப்பட்ட சுதந்திரம் பறிக்கப்பட்டதாகவும் கருதுகிறேன். நான் தங்கிய அறையில்கூட எனக்கு சுதந்திரம் இல்லையென்றால் வேறு எங்குதான் எனக்கு தனிப்பட்ட சுதந்திரம் கிடைக்கும்.

இது என்னுடைய தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடுவதுபோல் இருப்பதால், என்னால் இதுபோன்ற விஷயத்தை ஏற்றுக்கொள்ளவே முடியாது. அதனால் தயவு செய்து மக்களின் தனியுரிமைக்கு மதிப்பளித்து, அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை பொழுதுபோக்கிற்கான விஷயமாகக் கருத வேண்டாம் என வருத்தத்துடன் அந்த ரசிகர் king kohli's hotel room என்று பெயரிட்டு வெளியிட்ட வீடியோவையும் பகிர்ந்து தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

இந்த விஷயத்தால் மிகவும் கடுப்பாகிப்போன அனுஷ்கா ஷர்மா, தனக்கும் இதுபோன்ற இரக்கமும், கருணையும் இல்லாத சில அனுபவங்கள் சில ரசிகர்களால் கடந்த காலத்தில் ஏற்பட்டுள்ளது. ஆனால் தற்போது நடந்துள்ள இந்த சம்பவம் மிக மோசமானது மற்றும் தனிப்பட்ட மனிதனின் சுதந்திரத்தை மீறுவதாகவும் உள்ளது. நீங்களும் இந்த பிரச்சனையின் ஒரு பகுதி என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

சில சுய கட்டுப்பாடு என்பது அனைவருக்கும் வேண்டும். ஒருவேளை, இது உங்கள் படுக்கையறையில் நடந்தால், அதற்கென லிமிட் எங்கே இருக்கு? என்று வேதனையுடன் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com