
இன்று இந்தியா vs இலங்கை மகளிர் ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட்டின்இறுதிப்போட்டி நடைபெறுகிறது.
மகளிர் ஆசிய கோப்பை தொடரில் இந்த முறை பங்களாதேஷ், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து, ஐக்கிய அமீரகம் மற்றும் மலேசியா ஆகியஅணிகள் பங்கேற்றன.
அக்டோபர் 1-ஆம் தேதி மகளிருக்கான ஆசிய கோப்பைத் தொடர் தொடங்கியது. கடந்த வியாழன் அன்று இந்தியா தனது முதல் அரையிறுதி ஆட்டத்தில்தாய்லாந்தை தோற்கடித்தது. அதேபோல், இலங்கை அணி இரண்டாவதுஅரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானை 1 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இதன் மூலம் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி இன்று மதியம் 1 மணிக்கு சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்தொடங்குகிறது.
ஏற்கனவே இரு அணிகளும் நான்கு முறை இறுதிப் போட்டியில் மோதியுள்ளன. இதில் அனைத்து முறையும் இந்திய அணியே வெற்றி பெற்றுள்ளது. இதுவரைநேரடியாக மட்டும் இரு அணிகள் 21 போட்டிகளில் விளையாடியுள்ளன. அதில்இந்திய அணி 16 முறையும், இலங்கை 4 போட்டிகளில் இரு அணிகளும் 2008-ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் மோதிக்கொண்டன.
அதில் இந்திய அணி 177 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதேபோல், இந்த சீசனில் நடைபெற்ற லீக் போட்டியிலும் இந்திய அணி 41 ரன்கள்வித்தியாசத்தில் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பு மகளிர் ஆசிய கோப்பையில் இந்திய அணி 6 முறை வெற்றிபெற்றுள்ளது. இப்போட்டி இன்று இந்திய நேரப்படி பிற்பகல் 1:00 மணிக்குதொடங்குகிறது.
இந்தியா மற்றும் இலங்கை மகளிர் ஆசியக் கோப்பை டி20 2022 இறுதிப்போட்டிக்கான டாஸ் இந்திய நேரப்படி மதியம் 12.30 மணிக்கு நடக்கும். இப்போட்டியினை
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரடியாக காணலாம்
இந்திய அணி விவரம்:
ஷஃபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்ப்ரீத் கவுர்(கேப்டன்), ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), பூஜா வஸ்த்ரகர், தீப்தி சர்மா, சினேராணா, ராதா யாதவ், ரேணுகா சிங், ராஜேஸ்வரி கயக்வாட்
இலங்கை அணி விவரம்:
சாமரி அத்தபத்து (கேப்டன்), ஹர்ஷிதா மாதவி, ஹாசினி பெரேரா, நிலக்ஷி டிசில்வா, கவிஷா தில்ஹாரி, அனுஷ்கா சஞ்சீவனி (விக்கெட் கீப்பர்), மல்ஷாஷெஹானி, ஓஷாதி ரணசிங்க, சுகந்திகா குமாரி, இனோகா ரணவீர, அச்சினிகுலசூரிய
கோப்பையை வெல்லப் போவது யார்? பார்க்கலாம்.