உலக கோப்பை
உலக கோப்பை

அண்டர் - 19 உலக கோப்பை கிரிக்கெட்: ஐசிசி அறிவிப்பு!

2024-2027 ஆம் ஆண்டு வரையிலான உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளை நடத்தும் நாடுகள் குறித்த அட்டவணையை வெளியாகியுள்ளது. 2024 - 2027 ஆம் ஆண்டு வரை 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளை நடத்தும் நாடுகள் குறித்த அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இலங்கை, மலேசியா மற்றும் தாய்லாந்து, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா, வங்கதேசம் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கு 2024-2027 வரை (ஐசிசி) யு19 போட்டிகளை நடத்தும் நாடுகளாக அங்கீகரித்துள்ளது.

அதன்படி, 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் உலகக் கோப்பை போட்டி 2024 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெறுகிறது. தொடர்ந்து ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகளில 2026 இல் நடைபெறுகிறது என அறிவித்துள்ளது.

பின்னர் ஐசிசி அறிவித்ததாவது 2025 ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பை மலேசியா மற்றும் தாய்லாந்தில் நடைபெறுகிறது, மேலும் 2027 ஆம் ஆண்டு மகளிர் போட்டியை வங்கதேசம் மற்றும் நேபாளம் இணைந்து நடத்ததுகிறது என தெரியவந்துள்ளது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com