#JUST IN : 2026ம் ஆண்டுக்கான அரசு பொது விடுமுறை நாட்கள் அறிவிப்பு..!

தலைமைச் செயலகம்
தலைமைச் செயலகம்
Published on

ஜனவரி 1 முதல் டிசம்பர் 25-ந்தேதி வரை மொத்தம் 24 நாட்கள் பொது விடுமுறை நாட்கள் ஆகும். இவை அரசுத் துறைகள், அலுவலகங்கள், மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தும்.

ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல், திருவள்ளுவர் தினம், உழவர் தினம், தைப் பூசம், குடியரசு தினம், தெலுங்கு வருடப் பிறப்பு, மகாவீர் ஜெயந்தி, புனித வெள்ளி, தமிழ்ப் புத்தாண்டு, ரம்ஜான், மே தினம், பக்ரீத், மொகரம், சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, மிலாது நபி, காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை, விஜய தசமி, தீபாவளி, கிறிஸ்துமஸ் ஆகிய தினங்கள் பொது விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அதிகபட்சமாக ஜனவரி மாதம் 5 நாட்கள் பொது விடுமுறையாகும். மார்ச், ஏப்ரல் மற்றும் அக்டோபர் ஆகிய மாதங்களில் தலா 3 நாட்கள் பொது விடுமுறை வருகிறது. தைப்பூசம் மற்றும் முக்கிய பண்டிகையான தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமைகளில் வருவது குறிப்பிடத்தக்கது.

1 ஜனவரி - புத்தாண்டு - வியாழன்

15 ஜனவரி - பொங்கல் - வியாழன்

16 ஜனவரி - திருவள்ளுவர் தினம் - வெள்ளி

17 ஜனவரி - உழவர் திருநாள் - சனி

26 ஜனவரி - குடியரசு தினம் - திங்கள்

1 பிப்ரவரி - தைப்பூசம் - ஞாயிறு

19 மார்ச் - தெலுங்கு புத்தாண்டு தினம் - வியாழன்

21 மார்ச் - ரம்ஜான் (ஈதுல் பித்ர்) - சனி

31 மார்ச் - மகாவீர் ஜெயந்தி - செவ்வாய்

1 ஏப்ரல் - வணிக வங்கிகள் வருடாந்திர கணக்கு முடிவு நாள் - புதன் (வங்கிகளுக்கு மட்டும்)

3 ஏப்ரல் - புனித வெள்ளி - வெள்ளி

14 ஏப்ரல் - தமிழ் புத்தாண்டு / டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பிறந்தநாள் - செவ்வாய்

1 மே - மே தினம் - வெள்ளி

28 மே - பக்ரீத் - வியாழன்

26 ஜூன் - முகரம் (யோம்-இ-ஷஹாதத்) - வெள்ளி

15 ஆகஸ்ட் - சுதந்திர தினம் - சனி

26 ஆகஸ்ட் - மிலாதுன் நபி (நபி பிறந்த நாள்) - புதன்

4 செப்டம்பர் - கிருஷ்ண ஜெயந்தி - வெள்ளி

14 செப்டம்பர் - விநாயகர் சதுர்த்தி - திங்கள்

2 அக்டோபர் - காந்தி ஜெயந்தி - வெள்ளி

19 அக்டோபர் - ஆயுத பூஜை - திங்கள்

20 அக்டோபர் - விஜயதசமி - செவ்வாய்

8 நவம்பர் - தீபாவளி - ஞாயிறு

25 டிசம்பர் - கிறிஸ்துமஸ் - வெள்ளி

இதையும் படியுங்கள்:
"டாக்டர் ரெட்டிஸ்" நிதிக்குழுவை ஏமாற்றிய ஹேக்கர்கள்! 1930 க்கு ஒரு போன் கால் தான்.! தப்பியது ₹2.2 கோடி!
தலைமைச் செயலகம்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com