தோல்வி பயத்தால் அதிமுக அவதூறு பரப்புகிறது: முத்தரசன்

தோல்வி பயத்தால் அதிமுக அவதூறு பரப்புகிறது: முத்தரசன்

 ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா ஜனவரி 4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இதையடுத்து அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, அங்கு ஜனவரி 31முதல் நடைபெற்ற வேட்புமனுத்தாக்கல்  பிப்ரவரி 6ந்தேதியுடன் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து வேட்புமனுக்கள் பரிசீலனை மற்றும் வாபஸ்-க்கான நேரம் முடிவடைந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.  அங்க வரும்  27ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மார்ச் 2-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

தோல்வி பயம் காரணமாக திமுக கூட்டணி கட்சிகள் மீது அதிமுக அவதூறு பரப்வி வருகிறது என தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட இந்திய கம்யூ. கட்சி மாநில செயலர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

பாஜகவுக்கு சேவை செய்ய வேண்டிய கட்டாயத்தில் அதிமுக உள்ளது. அதானி குழும விவகாரம் பற்றி ஈபிஎஸ் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். அண்ணாமலை ஆதரிக்கும் வேட்பாளர் டெபாசிட் கூட பெற மாட்டார் எனவும் கூறினார்.

 இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு, நாம் தமிழர் கட்சியின் சார்பில் மேனகா, தேமுதிக சார்பில் ஆனந்த் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.  அங்கு நான்குமுனை போட்டி நிலவுகிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.

இதற்கிடையில் ஆளும் திமுக அரசு பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாக பாஜகவும், அதிமுகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் சுமத்தி வருகின்றனர். இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளன.

இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய கம்யூ. கட்சி மாநில செயலர் முத்தரசன்,

தோல்வி பயம் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதியில்  திமுககூட்டணி கட்சிகள் மீது அதிமுக அவதூறு பரப்புகிறது என்றவர்,  பாஜகவுக்கு சேவை செய்ய வேண்டிய கட்டாயத்தில் அதிமுக உள்ளது; அதானி குழும விவகாரம் பற்றி இபிஎஸ் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை எனக் கூறியவர், ஈரோடு கிழக்கில் ஈவிகேஎஸ் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என நம்பிக்கை தெரிவித்த அவர், அண்ணாமலை ஆதரிக்கும் வேட்பாளர் டெபாசிட் கூட பெற மாட்டார் எனவும் கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com