தர்மபுரியில் மின்சாரம் தாக்கி மீண்டும் ஒரு யானை பலி!

தர்மபுரியில் மின்சாரம் தாக்கி மீண்டும் ஒரு யானை பலி!

பாலக்கோடு எல்லைக்குட்பட்ட மாரண்டஹள்ளியில் மூன்று யானைகள் மின்சாரம் தாக்கி இறந்து பத்து நாட்கள் தான் கடந்துள்ளன, இதோமீண்டும் ஒரு யானை மின்சாரத்துக்கு பலியாகியுள்ளது.

காமபைநல்லூர் அருகே கெலவல்லி அருகே உள்ள தமிழ்நாடு உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் மின்பாதையில் சிக்கிய 30 வயதுக்கு மேற்பட்ட யானை ஒன்று சனிக்கிழமை அன்று மின்சாரம் தாக்கி இறந்தது.

பாலக்கோடு வனப்பாதுகாவலர் நட்ராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், யானை, ஏரி கரையின்மீது ஏற முயன்றபோது மின்கம்பியில் சிக்கியிருக்க வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்தார். அவர் அளித்த தகவல்களில் இருந்து இறந்த யானையானது பிக்லியில் இருந்து வெள்ளிச்சந்தை, கிருஷ்ணாபுரம், திப்பம்பட்டி வழியாக கமாபைநல்லூர் வந்தடைந்தது தெளிவானது.

"நாங்கள் காடுகளில் இருந்து வழிதவறி மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஊடுருவும் விலங்குகளை கண்காணித்து, கிராமங்கள் மற்றும் அப்பகுதியில் உள்ள சாலைகளில் இருந்து விரட்டினோம். சனிக்கிழமை கிருஷ்ணாபுரம், மோட்டுப்பட்டி வழியாக அப்படி வந்த இந்த யானையின் இயக்கத்தையும் தொடர்ந்தூ கண்காணித்து வந்தோம். கடைசியாக, கெலவல்லி அருகே உள்ள காமபைநல்லூரை அடைந்த யானை, விபத்து ஏற்பட்டபோது, ஏரி கட்டை மீது ஏற முயன்றது,'' என்றும் வனத்துறை அதிகாரி தெரிவித்தார்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திடம் இச்சம்பவம் குறித்து விளக்கம் கேட்ட போது யானை சிக்கும் அளவுக்கு மின்கம்பி தாழ்வாகவோ, தொய்வடையவோ இல்லை என மின்சாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

"யானையின் உயரமும், ஏரிக்கரையின் உயரமும் இணைந்ததால் மின்கம்பி யானையின் தலையில் வந்து மோதி மின்சாரம் தாக்கியது. இது முற்றிலும் விபத்து” என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் கே.வி.அப்பலா நாயுடு கூறியதாவது: ஓசூர் டி.எஃப்.ஓ கே.கார்த்திகேயினி மேற்பார்வையில் கால்நடை மருத்துவர் பிரகாஷ் தலைமையில் பிரேத பரிசோதனை நடைபெற்று வருகிறது. “எங்களிடம் யானை நடமாட்டம் குறித்த எந்தப் பதிவும் அந்தப் பகுதியில் இல்லை. காமபைநல்லூருக்கு அருகில் யானை நடமாட்டத்தை பதிவு செய்வது இதுவே முதல் முறை. என்றார்.

ஓசூர் டி எஃப் ஓ கார்த்திகேயினி கூறுகையில் ‘குறைந்த தொய்வு கோட்டில் யானை சிக்கவில்லை. ஏரிக்கரையின் உயரமும் யானையின் உயரமும் இணைந்து காணும் போது மின்கம்பி குறைந்த உயரத்தில் இருப்பது போல் தோன்றுகிறது. பிரேத பரிசோதனையில் யானைக்கு 30 வயதுக்கு மேல் இருப்பது தெரியவந்தது. நாங்கள் அவளை கெலவல்லி கிராமத்திற்கு அருகில் அடக்கம் செய்வோம். என்று தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com