மா. சுப்பிரமணியன்
மா. சுப்பிரமணியன்

மாணவர்களுக்கு புத்தகம் வழங்கிய மா. சுப்பிரமணியன்!

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தனக்கு பரிசாக வந்த 5,191 புத்தகங்களை , சென்னை மாநகராட்சி பள்ளி மாணவ - மாணவியர்களுக்கு பயன்பெறும் வகையில் பள்ளிகளுக்கும், நூலகங்களுக்கும் புத்தகங்களை வழங்கி வருகிறார்.

ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்த இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி மேயர் பிரியாவிடம் 5,191 புத்தகங்களை மா. சுப்பிரமணியம் வழங்கினார். துணை மேயர் மகேஷ்குமார், கமிஷனர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

அதன் பின் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: ஏற்கனவே எனக்கு வந்த 5,000 புத்தகங்களை விழுப்புரம் மாவட்டத்திற்கு அளித்திருந்தேன். தொடர்ந்து, 5,191 புத்தகங்களை சென்னை மாநகராட்சிக்கு அளிக்கிறேன்.

சென்னை மாநகராட்சியில் 1.13 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். அனைத்து பள்ளிகளிலும் நூலக வசதி இருப்பதால், மாணவர்கள் புத்தகங்களை படித்து பயன்பெறுவர்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com