பேருந்து
பேருந்து

6 மாவட்டங்களில் இன்றிரவு பேருந்துகள் ஓடாது!

மாண்டஸ் புயல் இன்றிரவு கரையை கடக்க உள்ள நிலையில் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று இரவு பேருந்துகள் ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவான 'மாண்டஸ்' புயல் காரணமாக தமிழகத்தில் அதிகனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மாண்டஸ் புயலை சமாளிக்கும் வகையில் பல்வேறு துறைகளின் தயார் நிலை குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் ஒருங்கிணைந்த ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது.

மாண்டஸ் புயல் எச்சரிக்கையை தொடர்ந்து சென்னையில் தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டன. அதன்படி, அனைத்து அரசு அதிகாரிகளும் தலைமையகத்தில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களில் புயல் வீசும் நாளான  இன்று இரவு பேருந்துகள்  சேவை நிறுத்தப்படும்  என்றும் பேருந்து நிலையங்களில் கூட்டமாக மக்கள் நிற்கக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com