22 அடியை எட்டியது செம்பரம் பாக்கம் ஏரி: உபரி நீர் திறப்பு!

செம்பரம்பாக்கம் ஏரி
செம்பரம்பாக்கம் ஏரி

சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் முக்கிய ஏரியான செம்பரம்பாக்கம் ஏரியில், மாண்டஸ் புயல் காரணமாக பெய்த கன மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
தற்போது செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை நெருங்கி உள்ளது. (மொத்த உயரம் 24 அடி). செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்த கொள்ளளவில் 83% நிரம்பியுள்ளது.

இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரிக்கு 2,134 கன அடி தண்ணீர் நிரம்பியுள்ளதால், இந்த ஏரியிலிருந்து 234 கன அடி நீர் வெளியேற்றப் படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது:

செம்பரம்பாக்கம் ஏரியில் 22 அடி வரை தண்ணீரை தேக்கி வைக்க முடிவு செய்யப் பட்டுள்ளது. இதன் பின்னர் கனமழை இருந்தால் மட்டும் உபரி நீர் திறக்கப்படும் என்று தெரிவித்தனர். கடந்த ஆண்டு செம்பரம்பாக்கம் ஏரியில் 23 கன அடி வரை தண்ணீர் தேங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com