இந்தியாவிலேயே நம்பர் 1 சென்னைதான்

இந்தியாவிலேயே நம்பர் 1 சென்னைதான்

கொரோனாவிற்கு பின்பாக 2022ல் தமிழ்நாட்டில் மிக அதிக அளவில் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. எப்போதுமே முதலீடுகள் செய்வதற்கு ஏற்ற மாநிலம் தமிழ்நாடுதான் என்ற பெருமை நமக்கு உண்டு. இந்த வருடமும் முதலீடுகளில் சாதனை படைத்துள்ளது.

இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் அதிக அளவு ஸ்டார்ட் அப் நிறுவனங்களை 2014-2022 ஆண்டுகளில் ஈர்த்து உள்ளது. ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் முதலீடுகளில் தமிழ்நாடுதான் நம்பர் 1 என்று அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது.

இத்தகவலை 'Indian Tech Start-up Funding Report 2022 என்ற தலைப்பில் இந்த அறிக்கை வெளியாகி உள்ளது.  Inc42 என்ற ஸ்டார்ட் அப் தகவல் அமைப்பு இந்த அறிக்கையை வெளியிட்டு உள்ளது.

சென்னையை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இதன் மூலம் 4 பில்லியன் டாலர் பெற்றுள்ளன.

 அதாவது 2014 முதல் 2022 வரை  இந்த 8 ஆண்டுகளில் சென்னையில் 300 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு உள்ளன. Tiger Global, Sequoia, Chiratae Ventures மற்றும் Iron Pillar போன்ற முக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் சென்னையில் தொடங்கப்பட்டு உள்ளன.

 சென்னைக்கு அடுத்த இடத்தில் புனே, ஹைதராபாத், அஹமதாபாத், ஜெய்ப்பூர் ஆகிய நகரங்கள் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளன.

 2022ம் ஆண்டில் மட்டும் எடுத்துக்கொண்டால் முதல் 5 இடங்களில் பெங்களூர், டெல்லி , மும்பை, சென்னை, ஹைதராபாத் ஆகிய நகங்கள் உள்ளது.

 இதில் சென்னையில்தான் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அதிக அளவு முதலீடு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.

 அதே சமயம் இந்தியாவில் உள்ள மற்ற பெரிய நகரங்களில் இந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் செய்து வந்த முதலீடுகளை பெரிய அளவில் குறைத்துக் கொண்டதாகவும்  இந்த ரிப்போர்ட் தெரிவிக்கிறது.

இந்த நகரங்களுக்கு ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வந்தாலும், எதிர்பார்த்த அளவு முதலீடுகள் கிடைக்கவில்லை. அதோடு சென்னை இதில் முதலில் இருந்தாலும் தேசிய அளவில் இந்தியாவில் 2022ல் குறைந்த அளவே ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு உள்ளன. 652 நிறுவனங்கள் மட்டுமே இந்த ஆண்டில் தொடங்கப்பட்டு உள்ளது.

 2022ம் ஆண்டு மட்டும் தமிழ்நாட்டில் 1 லட்சம் கோடிக்கும் மேல் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில்  கொரோனாவிற்கு பின் பல்வேறு மாநிலங்கள் பொருளாதார ரீதியாக கடுமையான பின்னடைவை சந்தித்த போதும்,  தமிழ்நாட்டில் முதலீடுகள் குவிந்துள்ளன.

 அமெரிக்காவை சேர்ந்த Ford நிறுவனம் சென்னையில் இருந்து வெளியேறிய பின்பும் கூட சென்னையில் முதலீடுகள் குறையாமல் அதிகரித்துள்ளன.

முதல்வர் ஸ்டாலின் முதலீடுகளை பெறுவதற்காக சில மாதங்களுக்கு முன் வெளிநாடு பயணம் மேற்கொண்டதும், பல்வேறு தெற்காசிய நிறுவனங்களுடன் ஆலோசனை மேற்கொண்டதும் குறிப்பிடத்தக்கது. முக்கியமாக 'Made in Tamil Nadu' என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்ததும் குறிப்பிடத்தக்கது.

2022ம் வருடம் மொத்தம் 60 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டது தமிழ்நாடு அரசு . இதில் 1.25 லட்சம் கோடி ரூபாய் வரை முதலீடு செய்யப்பட்டது. இதன் மூலம் 75 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com