புதுமைப் பெண் திட்டம் .. இரண்டாம் கட்டத்தினை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்!

புதுமைப் பெண் திட்டம் .. இரண்டாம் கட்டத்தினை முதல்வர் ஸ்டாலின்  இன்று தொடங்கி வைத்தார்!

பட்டாபிராமில் உள்ள இந்து கல்லூரியில், புதுமைப் பெண் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தினை முதலமைச்சர் இன்று தொடங்கி வைத்தார். இதன் மூலம் கல்வி கற்கும் 1,04,347 மாணவிகள் பயன்பெறுவார்கள் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. மாணவ மாணவிகள் பள்ளியை இடைநிறுத்தம் செய்வதை இத்திட்டம் பெரிதும் தடுக்கிறது.

கடந்த செப்டம்பர் மாதம், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ், புதுமைப் பெண் திட்டத்தை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த புதுமைப் பெண் திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000/- வீதம் உதவித் தொகை வழங்குப்படுகிறது.

பெண்கள் கல்வி பயில்வதை ஊக்குவிக்கும் வகையிலும், உயர்கல்விக்கு உதவி செய்யும் நோக்கிலும் புதுமைப்பெண் திட்டம் தொடங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதன்மூலம் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

குடும்ப சூழல், வறுமை காரணமாக படிக்க இயலாத மாணவிகளுக்கு பொருளாதார ரீதியாக உதவுதல், குழந்தை திருமணத்தை தடுத்தல், பெண்களுக்கான தொழில் வாய்ப்புகளை அதிகரித்தல், பெண்களின் சமூக மற்றும் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்ய இது வழிவகை செய்யும் என அரசு தெரிவித்துள்ளது.

முதற்கட்டமாக இத்திட்டத்தால் 1,16,342 மாணவிகள் பயனடைந்து வருவதாக அரசு தெரிவித்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் இடைநிற்றலில் இருந்து 12,000 மாணவிகள் மீண்டும் உயர்கல்வியில் சேர்ந்து பயனடைந்துள்ளனர்.

பெண்களுக்கு உயர்கல்வி அளித்து, பாலின சமத்துவத்தை ஏற்படுத்துதல், குழந்தை திருமணத்தைத் தடுத்தல், குடும்பச் சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக மேற்படிப்பு படிக்க இயலாத மாணவிகளுக்கு பொருளாதார ரீதியாக உதவுதல், பெண் குழந்தைகளின் இடைநிற்றல் விகிதத்தை குறைத்தல், பெண் குழந்தைகளின் விருப்பத் தேர்வுகளின்படி அவர்களின் மேற்படிப்பை தொடர ஊக்குவித்தல், பெண்களுக்கான தொழில் வாய்ப்புகளை அதிகரித்தல், பெண்களின் சமூக மற்றும் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்தல் போன்றவற்றின் மூலம் அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்க வழிவகை செய்யப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com