சி.எம்.டி.ஏ., குழும கூட்டம் சென்னையில் வரும் 24ல் நடைபெறுகிறது!

சி.எம்.டி.ஏ., குழும கூட்டம் சென்னையில் வரும் 24ல் நடைபெறுகிறது!

சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமமான சி.எம்.டி.ஏ.,வின் நிர்வாக குழும கூட்டம் வரும் 24ம் தேதி நடக்க உள்ளது. நகர், ஊரமைப்பு சட்டப்படி, சி.எம்.டி.ஏ.,வில் புதிய திட்டங்கள், கொள்கை முடிவுகள் தொடர்பான முடிவுகள், நிர்வாக குழும கூட்டத்தில் தான் எடுக்கப்படும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, இந்த கூட்டம் நடத்தப்படுவது வழக்கம்.

சி.எம்.டி.ஏ.,வின், 271வது குழும் கூட்டம் சென்னையில் வரும் 24ம் தேதி நடக்க உள்ளது. சி.எம்.டி.ஏ.,வின் 270வது கூட்டம் கடந்த ஜூலையில் நடந்தது.

இதற்கான அழைப்பு, அனைத்து உறுப்பினர்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. கடந்த, 10 ஆண்டுகளாக குழுமத்தில் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் சேர்க்ககப்படாமல் இருந்தனர். இந்நிலையில், தற்போது சென்னை பெருநகரில் உள்ள நான்கு உள்ளாட்சி அமைப்பு தலைவர் குழுமத்தில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர்.

உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்கும் முதல் குழும கூட்டமாக 10 ஆண்டுகளுக்குப் பின் இது அமைந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com