தொடரும் பெட்ரோல் குண்டு வீச்சு: பொதுமக்கள் பதட்டம்..

பெட்ரோல் குண்டு வீச்சு
பெட்ரோல் குண்டு வீச்சு

மலாக்க துறை பாப்புலர் பிரான்ட் அமைப்பினரை கைது செய்தது தொடர்பாக நாடெங்கிலும் வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருவது குறிப்பிட தக்கது.

தமிழகத்தில் கடந்த சில நாள்களாக பா.ஜ.க மற்றும் ஆர்,எஸ்,எஸ் அமைப்பினர் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே.

அந்தவகையில் தற்போது கோவை, திருப்பூர், ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவது பொதுமக்களிடையே பெரும் அச்சுறுத்தலையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த 23 -ஆம் தேதி கோவை குனியமுத்தூரில் பாஜக பிரமுகர் பரத் என்பவரின் வீட்டின் மீது நள்ளிரவு மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். இதில், வீட்டு வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த அவரின் கார் தீப்பிடித்தது.

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் பாஜக பிரமுகருக்குச் சொந்தமான பேருந்தின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். கன்னியாகுமரி மாவட்டம், கருமன்கூடலைச் சேர்ந்த தொழிலதிபர் கல்யாணசுந்தரம் வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர்.

இது போன்ற சம்பவங்கள் தமிழகம் முழுவதுமமே பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது . போலீஸார் இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களைக் கண்டறிய 7 தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

பெட்ரோல் குண்டு
பெட்ரோல் குண்டு

தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களால் பல மாவட்டங்களில் பதட்டமான சூழல் உருவாகியுள்ளது. இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கோவையில் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் பா.ஜ.கவினர் போராட்டத்தையும் நடத்தியுள்ளனர். இனியும் அசம்பாவித சம்பவம் நடைபெற்று விடக்கூடாது என்பதற்காக காவல்துறையினர் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

சென்னையில் தங்கும் விடுதிகளில் போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர். இரண்டு நாள்களில் மட்டும் 450க்கும் மேற்பட்ட விடுதிகளில் சோதனை நடத்தப்பட்டது. பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்பாக தமிழக அரசிடம் மத்திய அரசு அறிக்கையை கேட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com