கவுன்சிலரின் கொலைவெறி தாக்குதல் - உயிரிழந்த ராணுவ வீரர்!

கவுன்சிலரின் கொலைவெறி   தாக்குதல் - உயிரிழந்த ராணுவ வீரர்!

திமுக கவுன்சிலர் ரவுடிகளுடன்  சேர்ந்து ராணுவ வீரரை கொடூரமாக தாக்கியதில் படுகாயம் அடைந்த ராணுவ வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.  இது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து திமுக கவுன்சிலர் தலைமறைவாகி உள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, திமுக பிரமுகர்களும், கவுன்சிலர்களின் அடாவடி போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது தமிழக மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இது, தற்போது லயோலா கல்லூரி நடத்திய கருத்துக்கணிப்பிலும் வெளிப்பட்டுள்ளது.

 கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போச்சம்பட்டி அடுத்த வேலம்பட்டி பகுதியில் வசித்து வருபவர் பிரபாகரன். இவரது தம்பி பிரபு.  இருவருமே ராணுவத்தில் பணிபுரிந்து  வந்துள்ளார்கள்.   ராணுவத்தில் இருந்து சொந்த ஊருக்கு வந்திருந்த நேரத்தில் கடந்த 8ம் தேதி அன்று காலையில்  பிரபாகரன் வீட்டின் அருகே உள்ள குடிநீர் தொட்டி அருகே துணி துவைத்துக் கொண்டிருந்திருக்கிறார்.  

அப்போது அந்த வழியாக சுமந்த நாஹோகனஹள்ளி பேரூராட்சியில் ஒன்னாவது வார்டு திமுக  கவுன்சிலர் சின்னச்சாமி,  குடிநீர் கிடைக்கும் இடத்தில் இப்படி துணி துவைப்பது சரியா? என்று ஆத்திரமாக கேட்டிருக்கிறார்.   இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது.  கோபம் அடங்காத சின்னச்சாமி அன்று மாலையில்  உறவினர்கள் , ஆதரவாளர்கள் 10 பேரை திரட்டி கொண்டு பிரபாகரன் வீட்டிற்கு வந்து பிரபாகரனையும் அவரது தம்பி பிரபுவையும் கொலைவெறி தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள்.

இதில் படுகாயம் அடைந்த பிரபு ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சசிகிச்சை  பெற்று வந்தார் . இன்று அவர் சிகிச்சை பலனின்றி இன்றி  உயிரிழந்துள்ளார்.  இதையடுத்து பிரபு போலீசில் அளித்து வாக்குமூலத்தின் அடிப்படையில் நாகரசம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து திமுக கவுன்சிலரின் மகன்கள் ராஜபாண்டி , சென்னையில் போலீசாக இருக்கும் சூரிய குரு ,சூரியமூர்த்தி மற்றும் அவர்களின் உறவினர்கள் வேடியப்பன் ,  மணிகண்டன்  ஆறு பேரையும் போலீசார் கைது செய்து உள்ளனர்.

மேலும், தலைமறைவான திமுக கவுன்சிலர் உள்பட மேலும்சிலரை கைது செய்ய தேடி வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

முதலில் அடிதடி வழக்காக பதிவு செய்திருந்த போலீசார் பிரபு உயிரிழந்ததை எடுத்து கொலை வழக்காக பதிவு செய்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com