முகநூல் காதல் - 9 வது கணவரை ஏமாற்றி விட்டு நகை, பணத்துடன் மணப்பெண் ஓட்டம்!

முகநூல் காதல் - 9 வது கணவரை ஏமாற்றி விட்டு நகை, பணத்துடன் மணப்பெண் ஓட்டம்!

வாணியம் பாளையத்தைச் சேர்ந்த அருண் ராஜ் என்பவர் முகநூலில் தனக்கு அறிமுகமான மகாலட்சுமி என்ற பெண்ணைக் காதலித்து திருமணம் செய்து கொண்டதாகத் தகவல். இவர்களது திருமணம் கடந்த ஆண்டும் ஜனவரி மாதம் நடந்தது.

முகநூலில் அறிமுகமான ஆரம்ப நாட்களில் அருண் ராஜிடம் தன்னை ஒரு அனாதை என மகாலட்சுமி கூறி இருக்கிறார். தனக்கு யாருமில்லாத காரணத்தாலும் முகநூலில் அறிமுகமான அருண் ராஜைத் தனக்குப் பிடித்திருப்பதாலும் தன்னுடன் நட்பாக இருக்க முடியுமா என்று கேட்டிருக்கிறார். இப்படித் தொடங்கிய இவர்களது முகநூல் நட்பு பிறகு தனிப்பட்ட சாட்களில் வளர்ந்து காதலாக மாறி இருக்கிறது. சில நாட்களில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர்.

திருமணமான முதல் நான்கு மாதங்கள் ஒழுங்காகக் குடும்பம் நடத்திய மகாலட்சுமி அதன் பிறகு தனது தோழிக்கு உடல்நலம் சரியில்லாததால் அவரைச் சந்திக்க சென்னைக்குச் செல்வதாகக் கூறி வீட்டில் இருந்த ஆறரைப் பவுன் நகை மற்றும் ரூ 83000 ஐ எடுத்துக் கொண்டு வீட்டை விட்டுச் சென்றிருக்கிறார். நகையும் பணமும் அருண்ராஜின் தங்கை திருமணத்திற்காக சேர்த்து வைக்கப்பட்டிருந்ததாகத் தகவல்.

இந்நிலையில் தோழிக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறி சென்னை சென்ற மகாலட்சுமி வீடு திரும்பவே இல்லை. அவர் அளித்த முகவரிக்குச் சென்று பார்த்தால் அது போலி முகவரி என்று தெரிந்தது. இந்நிலையில் தொடர்ந்து விசாரித்ததில் மகாலட்சுமி இதே போன்று நடித்து பல ஆண்களை ஏமாற்றி ஓட்டம் பிடித்தது அம்பலமாகி இருக்கிறது.

இப்போது அருண்ராஜ், மகாலட்சுமி அனாதையாக நடித்து தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு பணம், நகையை ஏமாற்றி ஓடிச் சென்றது குறித்து போலீஸில் புகார் அளித்திருக்கிறார்.

மகாலட்சுமி இதற்கு முன்பு இதே போல 9 ஆண்களை இப்படி நடித்து ஏமாற்றித் திருமணம் செய்து அவர்களது பணம், நகையை எடுத்துக் கொண்டு ஓட்டம் பிடித்திருப்பது குறித்து வழக்குகள் அந்தந்த ஊர்களில் நிலுவையில் இருக்கின்றன என்பதாகத் தகவல். இப்படி ஒரு மோசடிப் பெண்ணின் சதி வலையில் சிக்கி இன்னும் எத்தனை ஆண்கள் தங்களது சேமிப்பை இழக்கப் போகிறார்களோ தெரியவில்லை.

முகநூலில் அறிமுகமான பெண் ஒருவரை காதல் என்ற பெயரில் எந்த விசாரணையும் இன்றி மணந்து கொண்டு விட்டு இன்று நகையையும்

பணத்தையும் இழந்து அல்லாடும் அருண் ராஜ் போன்றவர்களின் நிலை பரிதாபமானது.

சமூக ஊடகங்களில் அறிமுகமாகும் நபர்களின் உண்மை முகம் தெரியாமல் இது போன்று மாட்டிக் கொண்டு அல்லாடும் நபர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com