மதுரை சரவணா ஸ்டோரில்     தீ விபத்து…

மதுரை சரவணா ஸ்டோரில் தீ விபத்து…

துரை மாட்டுத்தாவணியில் இருக்கும் சரவணா ஸ்டோரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பத்து மாடிகள் கொண்ட இந்த கட்டடத்தின் மூன்றாவது தளத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உடனடியாக தீ அணைப்புத்துறை வாகனம் மற்றும் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. நல்லவேளையாக அங்கிருந்த ஊழியர்கள், பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள் அனைவரையும்  பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

இந்த தீ விபத்திற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இது   குறித்து போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com