கேஸ் சிலிண்டர்: சிக்கனமாக பயன்படுத்துவது எப்படி?

கேஸ் சிலிண்டர்: சிக்கனமாக பயன்படுத்துவது எப்படி?

நாம் அன்றாடம் பயன்படுத்தும் கேஸ் சிலிண்டர் விலை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வரும் நிலையில் இல்லத்தரசிகள் எப்படி சிக்கமான பயன்படுத்தலாம் என்பது குறித்து பார்ப்போம்.

நமது அன்றாட வாழ்க்கையில் சமையல் கேஸ் சிலிண்டர் முக்கியமான ஒன்றாகிவிட்டது. கிராமத்தில் வசிப்பவர் களுக்கு கேஸ் சிலிண்டர் இல்லையென்றால் விறகு அடுப்பு இருக்கும். ஆனால், நகரங்களில் வசிக்கும் மக்கள் சமையலுக்கு கேஸ் அடுப்பை பயன்படுத்தி பழகி விட்டதால்,  சிலிண்டர் இல்லையென்றால் அவர்களது அன்றாட வாழ்க்கையை நினைத்துக் கூட பார்க்க முடியாது. நாளுக்கு நாள் கேஸ் விலை எகிறிக் கொண்டே இருக்கும் சூழலில், கேஸ் சிலிண்டரை எப்படி சிக்கமாக பயன்படுத்த வேண்டும். என்பதைப் பார்ப்போம்.

கேஸ் அடுப்பில் உள்ள பர்னர் எப்போதும் அழுக்குகள் படியாமல் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். எண்ணெய் பிசு பிசுப்பு மற்றும் அழுக்குகள் இருந்தால் அடைப்பு ஏற்பட்டு பிரச்னை ஏற்படும். இதனால் கேஸ் லீக் ஆகும் வாய்ப்பு கூட உண்டாகும். இதனால், சிலிண்டர் சீக்கிரமாக கூட தீர்ந்துவிடும். அதனால், பர்னர் எப்போதும் சுத்தமாக இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள். அடிக்கடி தனியாக எடுத்து சுத்தம் செய்து வைப்பது நல்லது,

அதேபோல காலையில் சமையலை முடிக்க வேண்டிய அவசரத்தில் ஈரமான பாத்திரங்களைக் கொண்டு சமையல் செய்வார்கள். முதல் நாள் இரவு ஜிங்கில் போட்ட பாத்திரத்தை மறுநாள் காலையில் அவசர அவசரமாக கழுவி, அதனை அப்படியே சமையலுக்கு பயன்படுத்த கூடாது. அந்த ஈரமான பாத்திரம் காய்வதற்கு 2 முதல் 4 நிமிடங்கள் வரை ஆகலாம். ஒரு நாள் இரண்டு நாள் என்றால் பரவாயில்லை. ஒவ்வொரு நாளும் இது போன்று இருந்தால் சிலிண்டர் சீக்கிரமே காலியாகிவிடும்.
 

சமைக்கும்போது என்ன சமைத்தாலும், அதனை மூடி வைத்து சமைக்க வேண்டும். காய்கறிகள் சமைப்பதாக இருந்தாலும் சரி, அரிசியாக இருந்தாலும் மூடி வைத்து சமைத்தால் சீக்கிரமாகவே வெந்துவிடும். குக்கர் கூட பயன்படுத்தலாம்.

சமையலுக்கு தேவையான பொருட்கள் பிரிட்ஜில் இருந்தால் முதலில் அதனை எடுத்து வெளியில் வைக்க வேண்டும். அதிலுள்ள குளிர்ச்சி முற்றிலும் போன பிறகு சமைக்க பயன்படுத்த வேண்டும். அப்படியே குளிர்ச்சியாகவே பயன்படுத்தினால் சீக்கிரம் வேகாது. அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். இதனால் கேஸ்தான் வீணாகும்.

சமைப்பதற்கு முன்னதாக அரிசி, பருப்பு, பயறு வகைகளை ஊற வைக்க வேண்டும். அப்படி ஊற வைத்து சமைத்தால் வெகு சீக்கிரமாகவே எல்லாமே வெந்துவிடும். இதன் மூலமாக சிலிண்டர் மிச்சமாகும். இப்படி சின்ன சின்ன விஷயங்களில் கவனம் செலுத்தி கேஸ் வீணாவதைத் தடுத்து, மிச்சப்படுத்துவதன் மூலம் மேலும் நான்கு நாட்கள் அல்லது ஒரு வாரம் சிலிண்டரைப் பயன்படுத்தலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com