தங்க மங்கை!

தங்க மங்கை!

டகள வீராங்கனையில் இருந்து இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முதல் பெண் தலைவர் பதவிக்குத் தேர்வு செய்யப்பட்டு வரலாறு படைத்துள்ளார் தங்க மங்கை பி.டி. உஷா. கேரள கல்லூரி போட்டியில் 14 பதக்கங்கள், பாகிஸ்தானில் நடைபெற்ற பாகிஸ்தான் ஓபன் தடகளப் பந்தியத்தில் 4 தங்கம், தில்லி ஆசியப் போட்டியில் 2 வெள்ளி என பதக்கங்களை அள்ளியவர் இந்திய தடகள ராணி பயோலி எக்ஸ்பிரஸ் என்ற பி.டி. உஷா. இரண்டுமுறை உலகின் சிறந்த தடகள வீராங்கனை விருதும், தங்க ஷூ விருதும் பெற்றுள்ளார்.

101 சர்வதேச பதக்கமும் ஜகார்த்தா ஆசிய பீல்ட் டிராக் போட்டியில் 5 தங்கபதக்கமும் வென்றவர். கேரளா மாநிலம் கோழிக்கோடு பல்கலைக் கழகம் சார்பில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது. இந்திய ஒலிம்பிக் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு பி.டி. உஷா வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தார். வேறு யாரும் அந்தப் பதவிக்கு போட்டியிடாததால் உஷா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட முதல் பெண் மற்றும் விளையாட்டு வீராங்கனை என்ற பெருமைகளை 95 ஆண்டு கால ஒலிம்பிக் சங்கம் பெற்றுள்ளது. கேரளத்தின் கொயிலாண்டியில் உஷா தடகளப் பயிற்சிப் பள்ளியை நடத்திவருகிறார். இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவராக தேர்வாகி, அந்தப் பொறுப்பை ஏற்றுள்ள தங்கமங்கை, அவரைப் போல பல தங்க மங்கைகளை உருவாக்கி சாதனை படைப்பார். அவரின் தடகள பயிற்சிப் பள்ளியிலேயே பலப்பல வீராங்கனைகளை உருவாக்கி வருகிறாராம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com