கள்ளக்குறிச்சி பள்ளியை அரசே ஏற்று நடத்த முடியாது: உயர் நீதி மன்றம் தள்ளுபடி!

கள்ளக்குறிச்சி பள்ளி
கள்ளக்குறிச்சி பள்ளி

கள்ளக்குறிச்சி பள்ளியை அரசே ஏற்று நடத்தக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கணியாமூரில் உள்ள தனியார் பள்ளியில், பிளஸ் 2 படித்த மாணவியின் தற்கொலை சம்பவத்தைத் தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டது. பள்ளி வாகனங்கள் மற்றும் பொருட்கள் அனைத்தும் அடித்து நொறுக்கப்பட்டன. பள்ளி வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. கலவரக்காரர்கள் பள்ளியின் பொருட்களை திருடி செல்வதும் அங்கங்கே நடைபெற்றது.

இது தொடர்பாக வழக்கு பதியப்பட்டு பலர் கைது செய்யப்பட்டதும் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி பள்ளி கலவரம்
கள்ளக்குறிச்சி பள்ளி கலவரம்

மாணவி மரணம் தொடர்பான வழக்கை, சி.பி.சி.ஐ.டி.,போலீஸ் விசாரணை செய்து வந்தது. கலவரம் சம்பந்தப்பட்ட வழக்கினை சிறப்பு புலனாய்வு பிரிவும் விசாரித்து வருகிறது. தற்போது பள்ளி மீண்டும் இயங்கவும் அரசு அனுமதி அளித்துள்ளது.

இது தொடர்பாக பள்ளியை அரசே ஏற்று நடத்தக் கோரி, தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் ரவி என்பவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மாணவர்களின் பாதுகாப்பை கருதி, சிறப்பு அதிகாரியை நியமித்து, பள்ளியை அரசின் கட்டுப்பாட்டில் எடுக்கும்படி, மனுவில் கோரியிருந்தார்.

மனுவை பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி கிருஷ்ணகுமார் அடங்கிய 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. தமிழகத்தில் உள்ள பள்ளிகளில், ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு பிரச்னைகள் இருக்கும். அதற்காக அரசு ஏற்கும்படி கோர முடியுமா? என, முதல் பெஞ்ச் கேள்வி எழுப்பியது. அதன் பிறகு 'மனுவில் எந்த தகுதியும் இல்லை; நியாயமான காரணம் இல்லை' எனக் கூறி உயர் நீதி மன்றம் வழக்கினை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com