பொங்கல் பரிசுத் தொகையை வங்கிக் கணக்கில் செலுத்த அரசு திட்டம்!

பொங்கல் பரிசுத் தொகையை வங்கிக் கணக்கில் செலுத்த அரசு திட்டம்!

தமிழகத்தில் வங்கிக் கணக்கு இல்லாத 14 லட்சத்து 60 லட்சம் ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு  அடுத்த ஒரு வாரத்திற்குள் கூட்டுறவு வங்கிகளில் சேமிப்பு கணக்கு துவக்கும்படி, மண்டல இணை பதிவாளர்களுக்கு கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது.

ஜனவரியில் பொங்கல் பரிசு தொகையை நேரடியாக ரேஷன் கார்டுதாரர்களின் வங்கி கணக்கில் செலுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மத்திய அரசின் 'ஆதார்' எண் அடிப்படையில் ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகின்றன. அப்படி ஆதார் எண் அடிப்படையில் ஆய்வு செய்ததில் தமிழகத்தில் 14 லட்சத்து 60 லட்சம் ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு  வங்கி கணக்குகள் இல்லாத விபரத்தை அரசு கண்டறிந்துள்ளது. அவர்களுக்கு அருகில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் சேமிப்பு கணக்கை துவக்க நடவடிக்கை எடுக்குமாறு மண்டல இணை பதிவாளர்களிடம் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் சமீபத்தில் தெரிவித்தார்.

சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில் உணவு வழங்கல் துறை ஆணையர் ராஜாராமன் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் நேற்று 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக மண்டல இணை பதிவாளர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினர். அதில் வங்கி கணக்கு இல்லாத 14.60 லட்சம் கார்டுதாரர்களுக்கு ஒரு வாரத்திற்குள் அருகில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் கணக்கு துவக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

ஜனவரியில் பொங்கல் பரிசு தொகையை ரேஷன் கார்டுதாரர்களின் வங்கி கணக்கில் செலுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அதற்காகவே வங்கி கணக்குகளை விரைந்து துவக்கும் பணியில் அரசு ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com