படிக்கட்டில் தொங்குகிறீர்களா? இதை படிங்க முதலில் ....!

பேருந்து
பேருந்து

மாணவர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யுங்கள் என்றும் அது ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களின் பொறுப்பு என்றும் போக்குவரத்து கழகம் வலியுறுத்தியுள்ளது. சமீப காலமாகவே பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு பேருந்தில் செல்லும் மாணவர்கள் சிலர் படிக்கட்டுகளிலும், ஜன்னல் கம்பிகளிலும் தொங்கிக் கொண்டு ஆபத்தான முறையில் பயணம் செய்து வருகின்றனர். இதனால் அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது.

இனி ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களின் அறிவுரையை, மாணவர்கள் கேட்காமல் மாணவர்கள் மீறிச் சென்றால் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் பேருந்து இயக்கத்தை நிறுத்தி , போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் ஓரமாக நிறுத்தி, அருகில் உள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது காவல்துறை அவசர அழைப்பு 100 என்ற எண்ணுக்கோ, மா.போ.க வான்தந்தி பிரிவுக்கோ தகவல் தெரிவித்து புகார் அளித்திட வேண்டும் என்றும் போக்குவரத்து கழகம் கூறியுள்ளது.

ஆபத்தான பயணம்
ஆபத்தான பயணம்

தற்போது மாநகர போக்குவரத்துக் கழக பேருந்துகளில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்யாதவாறு படிக்கட்டு மற்றும் முறையற்ற பயணத்தை தவிர்க்க மாணவர்களை அறிவுறுத்த வேண்டும். பேருந்துகளில் ஏறும் போதும், பயணம் செய்யும்போதும், பாதுகாப்பான விதிகளை அவர்கள் கடைப்பிடிக்கச் செய்ய, ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நிலையான இயக்க நெறிமுறைகளை மாநகரப் போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com