கொரோனா பாதிப்பு எதிரொலி ... இனி முக கவசம் கட்டாயம் ... தயார் நிலையில் மருத்துவமனைகள்!

கொரோனா பாதிப்பு எதிரொலி ... இனி முக கவசம் கட்டாயம் ... தயார் நிலையில் மருத்துவமனைகள்!

கொரோனா பாதிப்பு மீண்டும் உயர்ந்து கொண்டிருப்பதால் , முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேவையான படுக்கை வசதி , ஆக்சிஜன், மருந்து மாத்திரைகள் போன்றவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் பேசிய அவர் தினந்தோறும் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்தி வருகிறோம். பொதுமக்கள் இந்த பரவலை தடுப்பதற்கு சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டியது அவசியம். சமூக , சமுதாய விழாக்களாக இருந்தாலும், அரசியல் நிகழ்வுகளாக இருந்தாலும் அங்கே பெரிய அளவில் கூட்டம் கூடும்போது முக கவசங்களை அணிவதும், தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்புகளால் கழுவி கொள்வது போன்ற இந்த விதிமுறைகளை தொடர்ச்சியாக கடைபிடிப்பது என்பது நல்லது.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவையே, புதிய உருமாற்றம் பெற்றுள்ள கொரோனா வைரஸ், எஸ்பிபி, பிஏ 2 போன்ற வைரஸ்கள் இன்றைக்கு மீண்டும் உலகை அச்சுறுத்த தொடங்கி இருக்கிறது. கடந்த காலங்களில் துபாய், சிங்கப்பூர் போன்ற விமான நிலையங்களில் இருந்து வரும் பயணிகள், நமது நாட்டில் இருக்கிற பன்னாட்டு விமான நிலையங்களான திருச்சி, கோவை, மதுரை, சென்னை ஆகிய இடங்களுக்கு வரும் பொழுது ரேண்டமாக 2% என்கிற அளவில் பரிசோதனை செய்யபப்டுவார்கள். அப்போது 2 , 3 நாட்களில் பரிசோதனை செய்யப்பட்டதில் ஒருவருக்கு பாதிப்பு என்கின்ற அளவில் தான் இருக்கும்.

ஆனால் தற்போது தினந்தோறும் 8, 10 பேருக்கு மட்டுமே அந்த பாதிப்பு இருந்து கொண்டிருக்கிறது. எனவே உலகம் முழுவதும் இந்த பாதிப்பு இருப்பது உறுதி படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் நேற்றைக்கு மட்டும் 4 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்ததில் 112 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

அந்த வகையில் இன்றைக்கு ஒட்டுமொத்தமாகவே இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பின் தன்மை என்பது உயர்ந்து கொண்டிருக்கிறது என்றாலும் மிதமான அளவுக்கான பாதிப்பே இருந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் இன்னைக்கு போதுமான அளவுக்கு படுக்கைகளாக இருந்தாலும் ஆக்சிஜன் வசதியாக இருந்தாலும் மருந்து மாத்திரைகளாக இருந்தாலும் அனைத்தும் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளது என மா. .சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com