மின் இணைப்பில் ஆதாரை இணைக்க 2 நிமிடம் போதும்!

EB
EB

தமிழகத்தில் மொத்தம் 2.30 கோடி மின் இணைப்புகளும், 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 11 லட்ச குடிசை வீடுகளுக்கான மின் இணைப்புகளும் உள்ளன. இந்த மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு தமிழ்நாடு மின் வாரியம் அறிவிப்பை வெளியிட்டு இருந்தது.

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க ஒரே நேரத்தில் பலர் முயன்றதால் சர்வர் பிரச்னை, ஆன்லைனில் ஆதார் நகலை அப்லோடு செய்வதில் சிக்கல் போன்றவற்றால் நுகர்வோர்கள் பெரும் சிக்கலை சந்தித்து வந்தனர். இதனால் பொது மக்களின் சிரமங்கள் விரைவில் சரி செய்யப்படும் என்று மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆதாரை இணைக்க https://adhar.tnebltd.org/Aadhaar/ என்ற இணையதள பக்கத்திற்கு சென்று உங்களின் மின் இணைப்பு பதிவை உள்ளிட்டு ஆதார் எண்ணை இணைக்கலாம்

அதன்படி தற்போது மின் இணைப்புடன் ஆதாரை இணைக்கும் பணியை மின்வாரியம் எளிமைப்படுத்தி உள்ளது. அதன்படி ஆதார் எண்ணை மட்டும் பதிவிட்டால் போதும். நகலை பதிவேற்றம் தேவை செய்யவில்லை. இதனால் பயனாளர்கள் 2 நிமிடத்தில் ஆதாரை மின் இணைப்புடன் இணைக்க முடியும்.

அதன் வழிமுறைகள் :

  • ஆதாரை இணைக்க https://adhar.tnebltd.org/Aadhaar/என்ற இணையதள பக்கத்திற்கு சென்று உங்கள் மின் இணைப்பு எண், மொபைல் எண், இமேஜில் இருக்கும் டெக்ஸ்டை (text) டைப் செய்ய வேண்டும்.

  • நீங்கள் டைப் செய்த மின் இணைப்புக்கான நுகர்வோர் பெயர் திரையில் தெரியும். அதற்கு கீழ் நீங்கள் அந்த வீட்டிற்கு உரிமையாளரா அல்லது வாடகைக்கு குடியிருப்போரா அல்லது நீங்கள் அந்த வீட்டின் உரிமையாளர் ஆனால் மின் இணைப்பு வேறு ஒருவர் பெயரில் உள்ளதா என்ற ஆப்ஷன்களை தோன்றும். அதன்பின் உங்கள் ஆதார் எண்ணை டைப் செய்து நெக்ஸ்ட் கொடுக்க வேண்டும்

  • ஆதார் எண் உடன் நீங்கள் இணைத்துள்ள கைப் பேசி எண்ணுக்கு OTP வரும். அதனை நீங்கள் டைப் செய்து சப்மிட் கொடுத்தால் போதும். உங்கள் ஆதார் மின் இணைப்புடன் இணைக்கப்பட்டு விடும். மிக எளிதாக ஆதாரை இணைத்து விடலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com