ஜல்லிக்கட்டு
ஜல்லிக்கட்டு

பொங்கல் சமயத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும்: அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் 2023-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு போட்டிகள் திட்டமிட்டபடி நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்ததாவது:

தமிழகத்தில் வருகிற 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை சமயத்தில் பிரசித்தி பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி மிகவும் பிரசித்திபெற்றது. அந்த வகையில் பொங்கல் பண்டிகை நாளன்று அவனியாபுரத்திலும், ஜனவரி 15-ல் பாலமேட்டிலும், ஜனவரி 16 -ல் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள்  நடைபெறவுள்ளது எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com