7 கிலோ தங்கம் தாங்க: சென்னை விமான நிலையத்தில் போராட்டம்!

7 கிலோ தங்கம் தாங்க: சென்னை விமான நிலையத்தில் போராட்டம்!

சென்னை விமானநிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் தங்கலிடம் பறிமுதல் செய்த 7 கிலோ தங்கத்தை திருப்பித் தரக் கோரி இலங்கை மக்கள் 5 பேர் 6 நாள்களாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

-இதுகுறித்து சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

இந்த 7 கிலோ தங்கமானது  விமானக் கழிவறை மற்றும் முனைய கழிவறைகளிலிருந்து கைப்பற்ற பட்டுள்ளது. தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவற்றுக்கு உரிமை கோரும் இந்த இலங்கை மக்கள் இந்த தங்கத்துக்குரிய உரிய ஆவணங்கள் மற்றும் சுங்க வரியை  செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

-இவ்வாறு அந்த அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து போராட்டம் நடத்தும் இலங்கை மக்களில் ஒருவர் கூறியதாவது:

நாங்கள் 5 பேரும் இலங்கையில் உள்ள நகைவியாபாரிடம் வேலை செய்கிறோம். கடந்த இரண்டு ஆண்டுகளாக துபாயில் இருந்து எங்களுடைய முதலாளிக்கு சட்டப்பூர்வமாக தங்கத்தை எடுத்துசெல்கிறோம். துபாயிலிருந்து இலங்கைக்கு நேரடி விமானத்தில் டிக்கெட் கிடைக்காததால், சென்னை வழியாக செல்ல முடிவெடுத்தோம்.

சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் எங்களிடமிருந்து தங்கம் மற்றும் செல்போன்களை பரிமுதல் செய்தனர்.  பின்னர் செய்தியாளர்களிடம், விமானக் கழிவறை மற்றும் முனைய கழிவறைகளில் இந்த தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக சுங்கத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துவிட்டனர்.

பின்னர் எங்கள் செல்போனை திருப்பித் தந்துவிட்டு, தங்கத்தை தரவில்லை. மேலும் எங்களை நாட்டைவிட்டு கிளம்பும்படி மிரட்டினார்கள். இப்போது நாங்கள் கிளம்பி இலங்கை சென்று விட்டால் மீண்டும் திரும்பி வந்து எங்களின் 7 கிலோ தங்கத்தை வாங்க முடியாது. அதனால்தான் இங்கேயே தங்கியிருந்து போராடுகிறோம். 

-இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com