வீட்டில் கிளி வளர்க்க ஆசையா? நீலகிரி போகாதீங்க!

வீட்டில் கிளி வளர்க்க ஆசையா? நீலகிரி போகாதீங்க!

நீலகிரி மாவட்டத்தில் வீடுகளில் காட்டு கிளிகள் மற்றும் மைனா போன்ற பறவைகளை வளர்ப்பதற்கு அம்மாவட்ட வனத்துறை தடை விதித்துள்ளது.

-இதுகுறித்து நீலகிரி மாவட்ட வனத்துறை அறிவித்ததாவது;

நீலகிரி மாவட்டத்தில் வீடுகளில் காட்டு கிளிகள் மற்றும் மைனா போன்ற பறவைகளை வளர்ப்பதற்கு தடைவிதிக்கப் படுகிறது. ஏற்கனவே வீடுகளில் வளர்ப்பவர்களும் உடனடியாக அவற்றை வனப்பகுதிகளில் பறக்கவிட வேண்டும். இல்லாவிட்டால் இந்திய வனச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். 

-இவ்வாறு வனத்துறை நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நீலகிரி வனப்பகுதிகளில் காட்டுக் கிளிகள் மற்றும் மைனாக்களை பொறி வைத்து பிடித்து, விற்பனை செய்வது அதிகரிப்பதால் இந்நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக அம்மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஒலிபெருக்கி மூலம் எச்சரித்து வருகின்றனர்.

இந்திய வனச்சட்டத்தின் படி காடுகளில் சுற்றி திரியும் பறவைகளை வீடுகளில் வளர்ப்பது சட்ட விரோதம் என்பதால் இந்த நடவடிக்கையை எடுக்கப் பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com