போதைப் பொருள் எதிர்ப்பு : பள்ளிகளில் இன்று உறுதிமொழி!  

போதைப் பொருள் எதிர்ப்பு : பள்ளிகளில் இன்று உறுதிமொழி!  

போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நாளான இன்று (ஆகஸ்ட் 11) தமிழகத்தில் அனைத்து பள்ளி கல்லூரிகளில் இதுதொடர்பான உறுதிமொழியை இன்று காலை 10.30 மணிக்கு எடுக்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

-இது குறித்து தமிழக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டதாவது:

இன்று போதைப் பொருளுக்கு எதிரான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தமிழகம் முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக அனைத்து மாவட்ட பள்ளி கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

அதில், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11ஆம் தேதி காலை 10.30 மணிக்கு போதை விழிப்புணர்வு உறுதி மொழி எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் போதை விழிப்புணர்வு குறும்படத்தை மாணவர்களுக்கு காட்ட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் உறுதிமொழி எடுத்த விவரத்தினை இமெயில் மூலம் அனுப்பி வைக்க வேண்டும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

– இவ்வாறு தமிழக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com