மீண்டும் தாத்தாவானார் ரஜினிகாந்த்!

மீண்டும் தாத்தாவானார் ரஜினிகாந்த்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின்  இளைய மகள் சௌந்தர்யாவுக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளதையடுத்து, அவர் மீண்டும் தாத்தா ஆகியுள்ளதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்..

ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா, தொழிலதிபரும் நடிகருமான விசாகனை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். செளந்தர்யாவுக்கு ஏற்கனவே ஒரு மகன் உண்டு.

இந்நிலையில் சௌந்தர்யாவுக்கு இப்போது இன்னொரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் விசாகனின் தந்தை வணங்காமுடி ஆகிய இரு குடும்பத்தினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

-இதுகுறித்து சௌந்தர்யா ரஜினிகாந்த் தமது ட்விட்டர் பக்கத்தில், குறிப்பிட்டதாவது;

இறைவன் அருள் மற்றும் பெற்றோரின் ஆசீர்வாதத்தால் இன்று 2-வதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. என் மூத்த மகனுக்கு சின்னத்தம்பி வந்தாச்சு.

-இவ்வாறு சௌந்தர்யா தன் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுள்ளார்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com