ஆன்லைனில் இலவசமாக பிறப்புச் சான்றிதழ்: தமிழக அரசு!

ஆன்லைனில் இலவசமாக பிறப்புச் சான்றிதழ்: தமிழக அரசு!

தமிழகத்தில் பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்களை ஆன்லைனில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

– இது குறித்து தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவித்ததாவது:

தமிழக அரசின் உத்தரவின்படி ஒவ்வொரு பிறப்பும் 14 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும்.இறப்பு 7 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும்.இவ்வாறு பதிவு செய்ய தவறும் பட்சத்தில் அரசின் எந்த ஒரு சலுகை மற்றும் நலன்களை அவர்கள் பெற முடியாது.

தற்போது  ஆதார்,வாக்காளர் அட்டை மற்றும் ரேஷன் கார்டு போன்றவை  இணையதளம் மூலமாக பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில்  தற்போது பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்களை இலவசமாக இணையதளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம். 

தற்போது தமிழகத்தில் 2018 -ம் ஆண்டு மற்றும் நடப்பு ஆண்டுக்கான மருத்துவமனை மற்றும் பிற இடங்களில் நிகழ்ந்த பிறப்பு மற்றும் இறப்புகள் அனைத்தும் மென்பொருள் மூலம் பதிவேற்றம் செய்யப் பட்டுள்ளது.அதனால் பொதுமக்கள் இந்த சான்றிதழ்களை இலவசமாக இணையதளம் மூலமாகவே பெற்றுக் கொள்ளலாம். 

 – இவ்வாறு தமிழக  அரசு தெரிவித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com