சைபர் கிரைம் பற்றி காவல்துறை வெளியிட்ட புத்தகம்
சைபர் கிரைம் பற்றி காவல்துறை வெளியிட்ட புத்தகம்

'முத்துவும் 30 திருடர்களும்; சைபர் கிரைம் பற்றி காவல்துறை வெளியிட்ட புத்தகம்!

பொதுமக்கள் சைபர் குற்றங்களில் சிக்கி பணம் இழந்து தவிப்பதை தடுக்க, "முத்துவும் 30 திருடர்களும்" என்ற பெயரில் சைபர் குற்றங்கள் பற்றிய  விழிப்புணர்வு புத்தகத்தை சென்னை காவல்துறை வெளியிட்டுள்ளது.

பொதுமக்களை சைபர் குற்றங்களிலிருந்து காப்பாற்றவும், அதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உதவும் வகையில், தற்போது நடைமுறையில் உள்ள 30 வகையான சைபர் குற்றங்கள், அவற்றிலிருந்து  நாம் தப்பிப்பது எப்படி என்பது குறித்த செயல்முறைகளை எளிதில் புரியும்படியான விளக்கப்படங்களுடன் "முத்துவும் 30 திருடர்களும்" என்ற பெயரில் சென்னை காவல்துறை சார்பில் தயாரிக்கபட்டுள்ளது.

இந்த புத்தகத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் நேற்று வேப்பேரி காவல் ஆணையரகத்தில் வெளியிட்டார்.

இந்த சைபர் குற்ற விழிப்புணர்வு புத்தகத்தை பொதுமக்கள் அனைவரும் படித்து, சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com