சேலத்தில் புதிய ஆவின் ஐஸ்க்ரீம் தொழிற்சாலை!

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

சேலம் பால் பண்ணை வளாகத்தில் புதிய ஐஸ்கிரீம் தொழிற்சாலையை காணொலி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

நாட்டில் பெருகி வரும் ஐஸ்கிரீம் சந்தையில் ஆவின் பங்களிப்பை அதிகப்படுத்தும் விதமாக சேலம் பால் பண்ணை வளாகத்தில் புதிய ஐஸ்கிரீம் தொழிற்சாலையை முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். 

அந்த வகையில் சேலம் பால் பண்ணை வளாகத்தில் ரூ.12.26 கோடி மதிப்பில் நாள் ஒன்றுக்கு 6000 லிட்டர் உற்பத்தித்திறன் கொண்ட அதிநவீன தொழில்நுட்பத்தில் நிறுவப்பட்டுள்ள ஐஸ்கிரீம் தொழிற்சாலை திறக்கப் பட்டுள்ளது.

இப்புதிய ஐஸ்கிரீம் தொழிற்சாலை மூலம் 50 மி.லி., 100 மி.லி., 500 மி.லி., மற்றும் 1 லிட்டர் அளவுகளில் ஐஸ்கிரீம் தயாரிக்கப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

மேலும் பல்வேறு வகை சுவைகளில் கோன் ஐஸ்கிரீம் மற்றும் கப் ஐஸ்கிரீம் ஆகியவை உற்பத்தி செய்யப்படும் எனவும், இங்கு தயாரிக்கப்படும் ஐஸ்கிரீம் வகைகள் அனைத்து மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் முலமாக நுகர்வோர்களுக்கு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com