#Breaking பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா!

#Breaking பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா!

பழனி மலைக்கோவிலின் சுற்றுப்புற கோவில்கள் மற்றும் அடிவாரத்தில் உள்ள கோவில்களுக்கு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. பழனி முருகன் கோவிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்று உள்ளது. கடந்த சில மாதங்களாக கோவிலில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் மிக சிறப்பாக நடை பெற்றுவருகிறது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் கும்பாபிஷேகத்திற்கான யாக பூஜைகள் துவங்கி நடைபெற்று வருகிறது.எட்டு கால யாக பூஜைகளுடன் நடைபெறும் கும்பாபிஷேகத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.கும்பாபிஷேகத்தைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு வருகாய் புரிந்துள்ளனர்.

பழனி மலை அடிவார சன்னதிகள், கிரி வீதியில் உள்ள மயில்கள், பாத விநாயகர் கோயில் உள்ளிட்ட உப கோவில்களில் இன்று குடமுழுக்கு நடைபெற்றது.படிப்பாதையில் உள்ள சேத்ரபாலர், சண்டிகாதேவி, விநாயகர், இடும்பன், கடம்பன், குராவடிவேலர், அகஸ்தியர், சிவகிரீஸ்வரர், வள்ளிநாயகி, கும்மினி வேலாயுத சுவாமி, சர்ப்ப விநாயகர், இரட்டை விநாயகர் உள்ளிட்ட உப தெய்வ சன்னதி கோபுரங்களுக்கும் இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதையடுத்து நேற்று பழனி கோவில் மூலவரான நவபாஷாண முருகனுக்கு மருந்து சாத்தும் பணி நடைபெற்றது. கடந்த 23ஆம் தேதி மாலை முதல்கால யாக பூஜையுடன் துவங்கிய கும்பாபிஷேக யாக வேள்வி நிகழ்ச்சியில், நேற்று வரை நான்கு கால யாக பூஜைகள் நிறைவடைந்தன.அதிகாலையுடன் 8 கால யாக பூஜைகள் நிறைவடைந்து, கும்பாபிஷேக நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்நிலையில் மலைக்கோவில் மூலவர், ராஜகோபுரம், தங்க விமானம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் உள்ள திருக்கோவில்களுக்கு இன்று கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பழனியில் இன்று பாதவிநாயகர், சேத்ரபாலர், கிரிவீதியில் உள்ள 5 மயில் சிலைகள், படிப்பாதை சன்னதிகள், விநாயகர் சன்னதிகள், இடும்பன், கடம்பன், அகஸ்தியர், சிவகிரீஸ்வரர், வள்ளிநாயகி, கும்மினி வேலாயுத சுவாமி, சர்ப்ப விநாயகர், இரட்டை விநாயகர் சன்னதிகளில் குடமுழுக்கு நடைபெற்றது,காலை 8 மணி முதல் 9.30 மணிக்குள் ராஜகோபுரம், தங்க விமானம் ஆகியவற்றிற்கு தீர்த்தம் அபிஷேகம் நடத்தப்பட்டு, தொடர்ந்து மூலவருக்கு கும்பாபிஷேக விழா நடைபெற்று வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com