பொங்கல் பரிசு தொகுப்பு வழக்கு! உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவு!

pongal gift
pongal gift

இந்த ஆண்டும் வழக்கம் போல பொங்கல் தொகுப்பு பரிசினை தமிழக மக்களுக்கு பொது விநியோக கடைகள் மூலம் வழங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த பொங்கல் பரிசு ரொக்கமாக வழங்கப்படும் என்ற கருத்தும் பொது மக்களிடையே பரவி வந்தது. இந்த நிலையில் தமிழக அரசு விவசாயிகளிடம் பொங்கல் தொகுப்பு பொருட்களை வாங்கவேண்டும் என்று பொது நல வழக்கு ஒன்று தொடர ப்பட்டு விசாரணைக்கு வந்துள்ளது.

அரசு வழங்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பிற்கான பொருட்களை தமிழக விவசாயிகளிடம் இருந்தே கொள்முதல் செய்ய உத்தரவிடக் கோரிய மனு மீது தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

இதற்க்கு பதிலாக பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவது அரசின் கொள்கை முடிவு என்றும், இதில், முன்கூட்டியே தகவல் தெரிவிக்க இயலாது என்றும் உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தஞ்சை சுவாமி மலையைச் சேர்ந்த நபர் ஒருவர் தாக்கல் செய்த பொது நல மனுவில், அரிசி, வெல்லம், முந்திரி, ஏலக்காய் என 20 வகையான பொருட்களை தமிழக அரசு வெளி மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்வதற்கு பதிலாக, தமிழக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கு குறித்து தமிழக கூட்டுறவுத்துறை செயலர், தமிழக வேளாண்துறை முதன்மைச் செயலர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை டிசம்பர் 19ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com