புதுச்சேரி அரசு பள்ளிகள் சிபிஎஸ்இ-யுடன் இணைப்பு: மத்திய கல்வித்துறை!

பள்ளி
பள்ளி

புதுச்சேரியில் அரசுப் பள்ளிகளை சிபிஎஸ்இ பாட திட்டத்தின்கீழ்  இணைக்க விண்ணப்பிக்கலாம் என மத்திய கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரியில் தனி கல்வி வாரியம் இல்லாததால் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் தமிழக அரசின் கல்வி திட்டம் பின்பற்றப் படுகிறது. மாஹே பகுதியில் கேரளா பாடதிட்டமும், ஏனாம் பகுதியில் ஆந்திர பாடத்திட்டமும் பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில் புதுச்சேரியில் பிளஸ் 2 வரைக்கும் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் புதுச்சேரி அரசு கோரிக்கை வைத்தனர்.

இதனை ஏற்று விரைவில் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் அமல்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் உறுதியளித்தார்.

இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் இந்த கல்வியாண்டு முதல், 6-ம் வகுப்பிலிருந்து சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தை அமல்படுத்துவதற்கான அனுமதி அளித்துள்ளது.

மேலும் மத்திய அரசின் கல்வி வாரியத்தில், புதுச்சேரி பள்ளிகள் இணைப்புக்கான இணையதளம் டிசம்பர்- 31 வரை திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இதுகுறித்து புதுச்சேரி அரசு பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் சிவகாமி, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் புதுச்சேரி அரசு உயர்நிலை மற்றும் மேனிலைப்பள்ளிகள் சிபிஎஸ்இ இணைப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றும், அதற்கு தேவையான ஆவணங்களை டிசம்பர் 21ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com