‘தமிழைத் தேடி’ ராமதாஸின் சென்னை முதல் மதுரை வரை பரப்புரை பயணம்!

‘தமிழைத் தேடி’ ராமதாஸின் சென்னை முதல் மதுரை வரை பரப்புரை பயணம்!

பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் ராமதாஸால் 2002ம் ஆண்டு தொடங்கப்பட்டது, கொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை. ‘சங்கம் கண்ட தமிழானது சங்கத் தமிழாகவும், தங்கத் தமிழாகவும் இருக்க வேண்டுமே தவிர, மங்கும் தமிழாக இருக்கக்கூடாது. எம்மொழிக்கும் இணையில்லா செம்மொழியாம் செந்தமிழுக்கு எள்ளளவும் தொய்வும், துன்பவும் ஏற்பட்டுவிடக்கூடாது’ என்ற நோக்கில் துவங்கப்பட்ட இந்த அறக்கட்டளையானது அவ்வப்போது பல முக்கியமான நிகழ்வுகளை தமிழ் அறிஞர்களின் பங்கேற்போடு நடத்தி வருகிறது.

அந்த வகையில் தாய்மொழி தினமான இன்று மருத்துவர் ராமதாஸ் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே பரப்புரை நடைபெற்றது. இந்தத் ‘தமிழைத் தேடி’ விழிப்புணர்வு பயணம் இன்று தொடங்கி வருகின்ற 28ம் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழ் மொழியிலேயே கல்வி பயிற்றுவிக்க வேண்டும், தமிழ்வழிக் கல்வி கட்டாயமாக்கப்பட வேண்டும், உயர் நீதிமன்றங்களில் தமிழ் அலுவல் மொழியாக்கப்பட வேண்டும், தமிழ் ஆட்சி மொழியாக்கப்பட வேண்டும், தமிழைப் படித்தவர்களுக்கே அரசு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும், மருத்துவம் மற்றும் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு தமிழ் பாடத்தின் மதிப்பெண்ணையும் கணக்கில் கொள்ள வேண்டும் போன்ற தீர்மானங்களை இந்த கொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை கடந்த 2017ம் ஆண்டிலேயே இயற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ‘அன்னை தமிழை மீட்க’ என்ற முழக்கத்துடன் மருத்துவர் ராமதாஸால் தொடங்கப்பட்டுள்ள இந்த, ‘தமிழைத் தேடி’ விழிப்புணர்வு பயணம், சென்னையிலிருந்து தொடங்கி மதுரை வரை நடைபெற உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com