புத்துணர்ச்சி பானத்தின் வயது 200!

புத்துணர்ச்சி பானத்தின் வயது 200!

‘சாயா’ எனச் செல்லமாக அழைக்கப்படும் ’டீ’ எனும் தேயிலை பானத்துக்கு இன்று வயது 200!

தேயிலை என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது அசாமில் உள்ள தேயிலைத் தோட்டங்கள்தான். அங்கு வசிப்பவர் களின் வாழ்வாதாரமாக விளங்குகிறது தேயிலை தொழில். பசுமைத் தாவரமான இது வணிகப் பயிராக உள்ளது. இந்தத் தாவரங்களின் கிளைகளின் நுனியில் உள்ள இலையரும்பையும் அடுத்து இருக்கும் இரு இளம் இலைகளையும் கவனமாகப் பறித்து, அதனை உலரவைத்து, பொடியாக்கி மேலும் படிப்படியாகப் பக்குவப்படுத்தி, தொழில் ரீதியாக பல இடங்களில் சந்தைப்படுத்திய பின், நம் அருகில் இருக்கும் சிறு வணிகர்கள் மூலம் நம் கைகளில் சேர்ந்து பின் நம் நாவில் ருசிக்கிறது. வெள்ளைத் தேயிலை, பச்சைத் தேயிலை, கறுப்புத்தேயிலை என பல வகையான தேயிலைகள் இருக்கின்றன.

ந்த டீயின் வயது ஜஸ்ட் 200 தானாம். அதை தற்போது கொண்டாடி வருகிறது இந்தியாவின் தேயிலைப் பிரதேசமான அசாம் மாநிலம். கோடிக்கணக்கான மக்களின் மனம் கவர்ந்த தேயிலை மற்றும் அதனைச் சார்ந்த உபதொழில்கள் இந்தியாவில் வணிகரீதியாக அறிமுகப்படுத்தப்பட்டு 200 ஆண்டுகள் ஆகின்றன. தங்கள் வாழ்வாதாரமான தேயிலையைக் கவுரவப் படுத்தும் விதமாக அசாமில் உள்ள தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் வரும் ஆண்டு முழுவதும் கொண்டாட ஆயத்தமாகி உள்ளனர்.

இந்தியாவுக்கு வந்த இங்கிலாந்தின் ராபர்ட் ப்ரோஸ் என்பவரே  அசாமின் பிரம்மபுத்திர பள்ளத்தாக்கு பகுதியில் விளைந்திருந்த தேயிலைச் செடிகளைக் கண்டுபிடித்தவர். அதன் தன்மையை ஆராய்ந்த அவர் அவற்றைப் பதப்படுத்தி வணிக ரீதியாக பயன்படுத்தத் தொடங்கினார். பிறகு, அறிவியல் ரீதியான சாகுபடிக்குத் தயார் செய்யப்பட்டு 1833 முதல் இங்கிலாந்து அரசால் அங்கீகரிக்கப்பட்டு, வணிக ரீதியான சாகுபடிக்குக் கொண்டுவரப்பட்டது. இதனால் தேயிலையை தின சாகுபடி செய்து விற்பனை செய்யும் தொழில் வளர்ந்தது. ஆகவேதான் தேயிலை என்றாலே அசாம் முதலிடத்தில் உள்ளது. இப்படி இந்தியாவில் சிறு தொழிலாக  தொடங்கிய பாரம்பர்யம் மிக்க தேயிலையின் பயணம் தற்போது பிரம்மாண்டமாக ஆண்டுக்கு 70 கோடி கிலோ உற்பத்தியில் பெருமையுடன் பயணிக்கிறது.

ந்தத் தொழிலின் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு மூவாயிரம் கோடி ரூபாய்க்கு அதிகமான அந்நிய செலவாணியை ஈட்டித் தருகிறது. வடகிழக்கு தேயிலை சங்கத்தின் சார்பில் வரலாற்று எழுத்தாளரான பிரதீப் பருவா இதன் தொடர்பான புத்தகத்தை ’அசாம் தேயிலையின் 1823 - 2023 பயணம்’ எனும் தலைப்பில் வெளியிட்டுள்ளார். இதில் இந்தியாவின் தேயிலைத் தொழில் தொடர்பான வரலாற்றைத் தெரிந்துகொள்ளும் வகையில் சுவாரசியமான தகவல்கள் பல உள்ளன.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com