சாலைகள் சீரமைக்கப்பட வேண்டும்: இனியும் உயிர்ப்பலி கூடாது.

ராமதாஸ் வலியுறுத்தல்
 சாலைகள் சீரமைக்கப்பட வேண்டும்:  இனியும் உயிர்ப்பலி கூடாது.

சென்னை மாநகர சாலைகள் சீரமைக்கப்பட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

இதுகுறித்து அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

''சென்னை, மதுரவாயல் அருகே புறவழிச்சாலையின் சர்வீஸ் சாலை குண்டும் குழியுமாக இருந்ததால் அந்த வழியே வந்த ஷோபனா என்ற மென்பொறியாளர் தடுமாறி கீழே விழுந்தார். அப்போது அந்த வழியே வந்துக் கொண்டிருந்த சரக்குலாரி அவர் மீது ஏறி இறங்கியதால் நசுங்கி, சம்பவ இடத்திலேயே ஷோபனாஉயிரிழந்தார் என்ற செய்தியறிந்து வேதனையடைந்தேன். அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்.

 இதேபோல் 2020-ஆம் ஆண்டு அங்கு நடந்த விபத்தில் இருவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இதன் பராமரிப்பு பணி எந்த மண்டலத்தின் கீழ் வருகிறது, விபத்து நடந்த சாலையின் பராமரிப்பு எந்தத் துறையின் பொறுப்பு? என்பது குறித்து நீண்டகாலமாக ஒரு குழப்பம் நிலவி வருகிறது. அதிகாரிகளின் அலட்சியத்தாலும், போட்டி மனப்பான்மையினாலும் விபத்து நடந்த அந்த இடம் பராமரிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. அரசுத் துறைகளின் அலட்சியம் உயிர்களை பலிவாங்கக்கூடாது.

 சென்னையில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் பணிகள், மழைநீர் வடிகால் பணிகள் ஆகியவற்றாலும், பருவமழை காரணமாகவும் சென்னையில் பெரும்பான்மையான சாலைகள் பயணிக்க முடியாத அளவுக்கு மோசமாக சேதமடைந்துள்ளன. அவை இன்னும் சீரமைக்கப்படவில்லை. 

சென்னையில் சேதமடைந்த சாலைகளால் இனி ஓர் உயிர் கூட பறிபோகக்கூடாது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து சாலைகளையும் உடனடியாக சீரமைக்க தமிழக அரசும், மாநகராட்சியும் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.'' இவ்வாறு ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com