சேலம் மாவட்டத்தில் தீவிரமான போலீசாரின் கள்ளச்சாராய வேட்டை!

சேலம் மாவட்டத்தில் தீவிரமான போலீசாரின் கள்ளச்சாராய வேட்டை!

சமூகத்தை சீரழிக்கும் போதைப்பொருளைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயம் மற்றும்  கஞ்சா வேட்டைகளை போலீசார் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டத்திலும்  எஸ்பி சிவகுமார் உத்தரவின் பெயரில் கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கை  தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கள்ளச்சாராய புழக்கம் அதிக அளவு இருக்கும் கல்வராயன் மலையை ஒட்டிய பகுதிகளில் மதுவிலக்கு போலீசாரும் உள்ளூர் போலீசாரும் தினமும் ரெய்டுகளை நடத்தி வருகின்றனர்.

கருமந்துறை, வாழப்பாடி, ஆத்தூர், வீரகனூர், தலைவாசல் பகுதிகளில் கள்ளச்சாராய வழக்குகள் மிக அதிக அளவு பதியப்பட்டுள்ளது மேற்கு மாவட்ட பகுதியில் கொளத்தூர், கருமலை கூடல், மேட்டூர், தீவட்டிப்பட்டி, ஏற்காடு பகுதிகளில் கள்ளச்சாராய வேட்டையில் பலரை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த ஜனவரி ஒன்றாம் தேதியில் இருந்து மார்ச் 14ஆம் தேதி வரையிலான இரண்டரை மாத காலத்தில் சேலம் மாவட்டத்தில் 77 கள்ளச்சாராயம் வழக்குகள் பதியப்பட்டு, 84 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து ஆயிரக்கணக்கான லிட்டர் சாராயம் மற்றும் 14 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது  அதேபோல் கருமந்துறை கரிய கோவில் ஆத்தூர் பகுதியில் காட்டிற்குள் கள்ளச்சாராயம் ஊரல் போட்டிருந்ததை தனிப்படையினர் கண்டறிந்து  26 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். கைது செய்துள்ளதுடன் பதுக்கி வைத்திருந்த ஊறல்களில் இருந்து லிட்டர் கணக்கில் சாராயம் கீழே கொட்டி அழிக்கப்பட்டது.

இந்த நடவடிக்கைகளுடன்  டாஸ்மாக் மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யும் நபர்களையும் போலீசார் கைது செய்து சட்ட படி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த வகையில் மாவட்டம் முழுவதும் இரண்டரை மாதத்தில் மதுபானங்களை பதுக்கி வைத்து விட்டதாக 1,042 வழக்குகள் பதியப்பட்டு 21 ஆயிரத்து 217 பாட்டில்கள் பறிமுதல் ஆகியுள்ளது  இவ்வழக்குகளில் 1052 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி விழுப்புரம் மாவட்ட எல்லையில் கல்வராயன் மலை இருப்பதால் மாவட்ட எல்லைக்கு உட்பட்ட காட்டுப்பகுதியில் சிலர் ரகசியமாக கள்ளச்சாராயம் காய்ச்சி எடுத்து வந்து சேலம் மாவட்ட பகுதிகளான ஆத்தூர்,  தலைவாசல், வீரகனூரில் விற்பனை செய்கின்றனர். இதனை முற்றிலும் தடுக்க தமிழ்நாடு வனத்துறை மற்றும் கள்ளக்குறிச்சி விழுப்புரம் மாவட்ட காவல்துறையினருடன் இணைந்து சாராயவேட்டை சேலம் மாவட்ட காவலர்கள்  நடத்தி வருகின்றனர். கடந்த இரண்டரை  மாதத்தில் மிக அதிகப்படியாக சாராய பறிமுதல்கள் மற்றும் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது  

இது பற்றி சேலம் மாவட்ட எஸ்.பி சிவகுமார் "சேலம் மாவட்டத்தில் கல்வராயன் மலை, ஏற்காட்டை மையமாகக் கொண்ட சேர்வராயன் மலை ஆகிய இடங்களில் தான் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறது.  இதனை கண்டறிந்து பிடிக்க வனத்துறையினருடன்  கைகோர்த்து இணைந்து செயல்படுகிறோம். அதனால் தான் கள்ளச்சாராய ஒழிப்பில் தொடர்ச்சியாக கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோரை குண்டர் தடுப்பு காவலிலும் சிறை வைக்கிறோம். அதேபோல் திருந்தி வாழும் நபர்களுக்கு வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு உதவிகளை செய்து வருகிறோம்  கள்ளச்சாராய பழக்கம் இல்லாத நிலையை ஏற்படுத்த இத்தகைய குற்றங்களை ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது" என்றார்.

காவலர்களுக்கு பாராட்டுக்கள் தெரிவித்த சமூகஆர்வலர்கள் எப்படியோ பல உயிர்களை காவு வாங்கி குடும்பங்களின் எதிர்காலத்தை சிதைக்கும் கள்ளச்சாராயம் ஒழிந்தால் நிம்மதி என்கின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com