ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்! இலவச மின்சாரத்தில் மாற்றமில்லை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜி

ஆதாரை இணைப்பதால் மின் நுகர்வோருக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் மற்றும் மானியத்தில் எவ்வித பாதிப்புகளும் ஏற்படாது எனவும், வீடுகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் இலவச மின்சாரத்தில் எவ்வித மாற்றமுமின்றி தொடரும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

Adhar
Adhar

இன்று முதல் தமிழ்நாட்டில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம் நடைபெற வுள்ளது. தமிழ் நாட்டில் மின் இணைப்புடன், ஆதார் எண்ணையும் இணைப்பது தற்போது கட்டாயமாக்கப் பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 2 கோடியே 30 லட்சம் வீட்டு மின் இணைப்புகள் பயன்பாட்டில் உள்ளன. இது தவிர 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை மின் இணைப்புகளும் உள்ளன. இந்நிலையில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணையும் சேர்த்து இணைத்தால் தான், மின்சார கட்டணம் கட்ட முடியும் என்ற அறிவிப்பு வெளியானது. எனவே, மின் இணைப்புடன், ஆதார் எண்ணையும் இணைக்கும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

Electricity board
Electricity board

இது தொடர்பாக தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் , மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு வருகிற டிசம்பர் 31ம் தேதி வரை நடைபெறும் சிறப்பு முகாம்களில் பொது மக்கள் அனைவரும் தங்களது மின் கட்டணத்தை எவ்வித சிரமமும் இன்றி ஏற்கனவே உள்ள நடை முறையின் படி செலுத்தலாம். மேலும் வீடுகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் இலவச மின்சாரத்தில் எவ்வித மாற்றமுமில்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com