‘அமைதியை சீர்குலைக்கும் போலி வீடியோக்களை ஏற்க முடியாது’ உச்ச நீதிமன்றம்!

‘அமைதியை சீர்குலைக்கும் போலி வீடியோக்களை ஏற்க முடியாது’ உச்ச நீதிமன்றம்!

ட இந்தியாவில் இருந்து வந்து தமிழ்நாட்டில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக போலி வீடியோ ஒன்றை வெளியிட்டு வதந்தி பரப்பிய யூடியூபர் மணீஷ் காஷ்யப் தமிழ்நாடு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவர் மீது தமிழ்நாட்டில் 6 வழக்குகளும், பீகாரில் 12 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. தேசிய அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியமைக்காக அவர் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருக்கும் மணீஷ் காஷ்யப், ‘தம் மீதான தேசிய பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்’ என்று கோரி இருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்துக்கு வந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘தமிழகம் அமைதியான மாநிலம். அங்கு போலி வீடியோக்களைப் பரப்பி அந்நாட்டின் அமைதியை சீர்குலைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. யூடியூபர் காஷ்யப் மீது தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருப்பதையும் ரத்து செய்ய முடியாது. தேசப் பாதுகாப்பு பிரிவின் கீழ் உள்ள வழக்குகள் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தை ஏன் அணுகக்கூடாது' என்று தெரிவித்து மணீஷ் காஷ்யபின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com