சிவகுமார்
சிவகுமார்

தூய்மைப் பணிக்கு நவீன வாகனம்; சூர்யா நன்கொடை!  

சென்னையின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள கானாத்தூர் ரெட்டிக் குப்பம் பஞ்சாயத்து யூனியனுக்கு, தூய்மைப் பணிகளை எளிதாகக் கையாள்வதற்காக நவீன வாகனம் ஒன்றை ஊராட்சித் தலைவரிடம் நடிகர் சூர்யாவின் 2D என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பாக சூர்யாவின் தந்தை நடிகர் சிவகுமார் வழங்கினார். 

‘’எப்படி இந்த ஐடியா வந்தது?’’ – நடிகர் சிவகுமாரிடம் விசாரித்தோம்.. 

சூர்யாவின் 2D நிறுவனம் சார்பில் ஏர்கனவே பல சமூக நலப் பணிகளுக்காகவும், மக்கள் நலத் திட்டங்களுக்காகவும் நிதியுதவிகளும், பொருளுதவிகளும் நன்கொடையாக அளிக்கப்படுகின்றன.

அந்த வகையில், கானாத்தூர் ரெட்டிக் குப்பம் பகுதியில் தூய்மைப் பணிகளுக்காக வாகனம் ஒன்று வேண்டும் என அந்த ஊராட்சியின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்காக தான் இந்த வாகனத்தை நன்கொடையாக அளித்தோம்.’’ என்றார் சிவகுமார். 

 நவீன வாகனம்
நவீன வாகனம்

அந்த நவீன வாகனத்தை கானத்தூர் ரெட்டிக் குப்பம் ஊராட்சி மன்றத் தலைவரான திருமதி. வள்ளி எட்டியப்பனிடம் நடிகர் சிவகுமார் வழங்க, அப்போது 2D என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் இணைத் தயாரிப்பாளரான ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன் மற்றும் கானாத்தூர் நிர்வாகிகள் உடனிருந்தனர். 

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com