தமிழக அரசு 2023-24க்கான பாராட்டுக்குரிய நிதிநிலை அறிக்கை!

தமிழக அரசு 2023-24க்கான பாராட்டுக்குரிய நிதிநிலை அறிக்கை!

பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு மாநில அரசின் குறிப்பாக தமிழக அரசின் ஒரு நிதிநிலை அறிக்கை பொருளாதாரத்தை தொடர்ந்து கவனித்து வரும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரும் விதமாக இருக்கிறது.

பல்வேறு முக்கியமான துறைகளுக்கு நல்ல அளவுகளில் தொகை ஒதுக்கீடு என்பது தவிர, அவற்றைக் கொண்டு என்ன செய்ய இருக்கிறார்கள் என்ற திட்ட விவரங்களையும் அவர் தெரிவித்திருப்பதால் வருகிற மகிழ்ச்சி இது.

பள்ளி கல்வித்துறை, உயர்கல்வித்துறை, சமூக நல மேம்பாடு, சாலைகள் உள்ளிட்ட கட்டுமானங்கள் என பல்வேறு வளர்ச்சிக்கு தேவையான பலவற்றையும் சிந்தித்து செய்து இருப்பதாகவே தெரிகிறது.

பள்ளிகளில் வழங்கப்படும் காலை உணவு பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதை எடுத்துக்காட்டியதுடன் அதற்கான ஒதுகிட்டையும், பள்ளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து இருக்கிறார்கள்.

தவிர, வேலைவாய்ப்பு பெருக்குவதற்கு சரியான முயற்சியாக இளைஞர்களின் மாணவர்களின் தனித் திறனை ஊக்குவிப்பதற்காக மேம்படுத்துவதற்காக திறன் மேம்பாட்டு மையங்களை 54 அரசு பல் தொழில் நுட்ப கல்லூரிகளிலும் , 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களிலும் கிருஷ்ணகிரியில் தனியாக ஒரு தொழில் திறன் மேம்பாட்டு மையம் தொடங்குவதும் வரவேற்கத்தக்கது. ஐஏஎஸ் படிப்பிற்கு உதவி போன்ற திட்டங்களும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

சென்னையில், தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரையிலான தூரத்திற்கு நான்கு வழி மேம்பாலம், வடசென்னை மேம்பாட்டிற்கென மூன்று ஆண்டுகளில் ஆயிரம் கோடி ரூபாய் திட்டம், சென்னையில் இருக்கும் அரசு பேருந்து பணிமனைகளை மேம்படுத்துதல் போன்றவையும் வரவேற்கப்பட வேண்டியவை. அடையாறு மற்றும் கூவம் ஆறுகளை சுத்தப்படுத்தி மேம்படுத்த பிபிபி மாடலில் 1500 கோடி ரூபாய்க்கு திட்டம்.

பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணம் செய்ய பெண்களுக்காக 2800 கோடி ரூபாய், மாணவர்களுக்காக 1500 கோடி ரூபாய், மற்றும் டீசல் மானியத்திற்காக 2000 கோடி ரூபாய் போன்ற செலவுகளையும் செய்வதோடு பெண்களுக்கு மாதாந்திர உதவித் தொகையாக ரூபாய் ஆயிரம் கொடுப்பதற்கு செப்டம்பர் மாதம் முதல் நடைமுறைப்படுத்த போகிற திட்டத்திற்காக ஆறு மாத காலத்திற்கு மட்டுமே ரூபாய் 7000 கோடி ஒதுக்கீடு செய்திருப்பது இந்த திட்டத்தின் கீழ் தகுதி உடையவர் என பலரை தவிர்க்க மாட்டார்கள் என்று எண்ண வைக்கிறது.

மற்ற மாநிலங்கள் உடன் ஒப்பிடுகையில் தமிழகம் பெரும்பாலும் முழுவதுமே வளர்ச்சி அடைந்திருக்கிற மாநிலம் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்த போதிலும், அதற்குள்ளும் ஏற்றத்தாழ்வுகள் இருக்கிறது அவற்றையும் சரி செய்ய வேண்டும் என்கிற நோக்கில் இருக்கிற வட்டாரங்களிலேயே வளர்ச்சி குறைவாக இருக்கிற 50 வட்டாரங்களை தரவுகள் அடிப்படையில் கண்டெடுத்த அவற்றை அரசு திட்டங்களை சரியாக பெற வைக்க ஐந்து கோடி ரூபாய் செலவழிப்பது கூட ஒரு நல்ல சிந்தனை வரவேற்கப்பட வேண்டியது.

அரசின் வருவாய் பற்றாக்குறையை 1.32 சதவீதம் என கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதும் ,மொத்த கடன் தொகையை வழிகாட்டுதலுக்கு உட்பட்ட அளவுகளில் (25.63%) வைத்திருப்பதும் பாராட்டப்பட வேண்டியது.

பல்வேறு திட்டங்களின் கீழ் பயன்பெறுவோர் தகவல்களை ஒரே இணையதளத்தில் கொண்டு வரும் முயற்சியும் நிலப்பதிவு பத்திர பதிவு போன்றவற்றில் மின்னணு பயன்பாட்டை அதிகப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

தமிழ் வளர்ச்சித் துறைக்கான ஒதுக்கீடு விவரிக்கப்பட்டிருக்கும் கடந்த மாவட்டம் தோறும் நடத்த இருக்கும் புத்தகக் காட்சி திட்டங்களும், மதுரையில் கட்டப்பட இருக்கும் மாபெரும் நூலகமும் புதிய தொழிற்பேட்டைகளும் ஏழு புதிய நியோ டைடல் பார்த்துக்களும் நிச்சயம் வரவேற்கப்பட வேண்டியவை.

விவசாயம் காவல்துறை நீதித்துறை போன்றவற்றிற்கான பெரிய அறிவிப்புகள் இல்லை என்றாலும் திரு. PTR பழனிவேல் ராஜன் சிறப்பான பட்ஜெட்டை தான் கொடுத்திருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com